மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 18 பிப் 2022

பிரபு தேவா நடிக்கும் புதிய படத்தின் முதல் பார்வை!

பிரபு தேவா நடிக்கும் புதிய படத்தின் முதல் பார்வை!

பிரபு தேவா நடிப்பில் தயாராகும் படத்துக்கு 'முசாசி' எனப் பெயரிடப்பட்டு, அதன் முதல் பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது. இதை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அவருடைய இணையப்பக்கத்தில் வெளியிட்டார்.

அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகும் ஆக்‌ஷன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தில் பிரபு தேவா கதையின் நாயகனாக நடிக்கிறார். போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கும் பிரபு தேவாவுக்கு இந்தப் படத்தில் ஜோடியில்லை. இவருடன் நடிகர்கள் ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, அருள்தாஸ், நடிகர் ‘மாஸ்டர்’ மகேந்திரன், 'பழைய ஜோக்' தங்கதுரை, மகேஷ், மலையாள நடிகை லியோனா லிஷாய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

விக்னேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு எஸ்.என்.பிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தை ஜாய் ஃபிலிம் பாக்ஸ் என்டர்டெய்ன்மெண்ட் என்ற படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ தயாரித்திருக்கிறார். தமிழில் பிரபு தேவா கதாநாயகனாக நடித்து வெளியாகும் படங்கள் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வரும் சூழலில் புதிய படத்தின் முதல் பார்வை வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

-அம்பலவாணன்

கமலை மிரட்டினேனா: உதயநிதி

8 நிமிட வாசிப்பு

கமலை மிரட்டினேனா: உதயநிதி

தசாவதாரம் 2: கே.எஸ்.ரவிகுமார் சொன்ன தகவல்!

4 நிமிட வாசிப்பு

தசாவதாரம்  2: கே.எஸ்.ரவிகுமார்  சொன்ன தகவல்!

ஐசரி வேலனின் சிலையைத் திறந்து வைத்த கமல்

2 நிமிட வாசிப்பு

ஐசரி வேலனின் சிலையைத் திறந்து வைத்த கமல்

வெள்ளி 18 பிப் 2022