மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 16 பிப் 2022

துல்கர் சல்மானின் ‘ஹே சினாமிகா’ ட்ரைலர் வெளியீடு!

துல்கர் சல்மானின் ‘ஹே சினாமிகா’ ட்ரைலர் வெளியீடு!

நடிகர் துல்கர் சல்மானின் ‘ஹே சினாமிகா’ படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.

முன்னணி நடன இயக்குநரான பிருந்தா மாஸ்டர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘ஹே சினாமிகா’. இதில் நடிகர் துல்கர் சல்மான், அதிதி, காஜல் அகர்வால், நட்சத்திரா, ஆர்.ஜே. விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ள நிலையில் படம் நேரடியாகத் திரையரங்குகளில் மார்ச் 3ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உற்சாகமாக்கத் தனித்துவ இளைஞரான யாழன் (துல்கர்), அவரை காதலிக்கும் வானிலை விஞ்ஞானி மௌனா (அதிதி) ஆகியோரின் வாழ்க்கைக்குள் ட்ரைலர் நம்மை அழைத்துச் செல்கிறது. ஓரிரு வருடங்களுக்குப் பிறகு அவர்களது உறவில் என்ன நடக்கிறது, மலர்விழி (காஜல்) வருகைக்குப் பின்னர் எப்படி எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது என்பதுதான் கதையின் மையக்கரு.

காதல், நகைச்சுவை, உணர்வுகள் மற்றும் இசையின் கலவையாக உருவாகியுள்ள ஹே சினாமிகா, காதல் மற்றும் நட்பைக் கொண்டாடும் இளைமை ததும்பும் படமாக இருக்கும் என்பதை ட்ரைலர் வெளிப்படுத்துவதோடு படம் மீதான ஆர்வத்தை அதிகரிக்கிறது.

படம் குறித்துப் பேசிய பிருந்தா, "இது ஒரு ஃபீல் குட் திரைப்படம். இளைஞர்கள் மிகவும் ரசிப்பார்கள். அதே சமயம், அனைத்து வயதினரும் இப்படத்தைப் பார்த்து மகிழலாம். கொண்டாட்டம், குதூகலம் என உணர்ச்சிகளின் உற்சாகக் குவியலாக ‘ஹே சினாமிகா’ இருக்கும்," என்று கூறினார். ‘96’ புகழ் கோவிந்த் வசந்தா இசையில் உருவாகியுள்ள ‘ஹே சினாமிகா’ பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹே சினாமிகா’ மார்ச் 3, 2022 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஆதிரா

கமலை மிரட்டினேனா: உதயநிதி

8 நிமிட வாசிப்பு

கமலை மிரட்டினேனா: உதயநிதி

தசாவதாரம் 2: கே.எஸ்.ரவிகுமார் சொன்ன தகவல்!

4 நிமிட வாசிப்பு

தசாவதாரம்  2: கே.எஸ்.ரவிகுமார்  சொன்ன தகவல்!

ஐசரி வேலனின் சிலையைத் திறந்து வைத்த கமல்

2 நிமிட வாசிப்பு

ஐசரி வேலனின் சிலையைத் திறந்து வைத்த கமல்

புதன் 16 பிப் 2022