கலாவதி பாடலின் சாதனையை முறியடிக்குமா அரபிக் குத்து?

entertainment

தமிழ் சினிமாவில் விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் எண்ணிக்கை அளவுக்கு தெலுங்கு சினிமாவில் ரசிகர்களை கொண்டிருப்பவர் மகேஷ்பாபு.

தெலுங்கில் இவரது நடிப்பில் வெளியான சில வெற்றிப் படங்களை விஜய் ரீமேக் செய்து வெற்றி பெற்றதால் மகேஷ் பாபு, விஜய் இருவரையும் ஒப்பிட்டு அவர்களது ரசிகர்களிடையே அடிக்கடி சண்டை நிகழ்வது வாடிக்கை.

இதனிடையே, விஜய் நடித்து அடுத்து வெளிவர உள்ள ‘பீஸ்ட்’ படத்தின் முதல் சிங்கிளும், மகேஷ் பாபு நடித்து அடுத்து வெளிவர உள்ள ‘சர்க்காரு வாரி பாட்டா’ படத்தின் முதல் சிங்கிளும் பிப்ரவரி 14ம் தேதி ஒரே நாளில் வெளியாகும் என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

இருவரது சிங்கிள்களில் யாருடைய பாடல் யூடியூபில் அதிக பார்வைகளைப் பெற்று சாதனை படைக்கப் போகிறது என்பது குறித்து அப்போதே இருவரது ரசிகர்களும் சண்டையிட ஆரம்பித்துவிட்டார்கள்.

விஜய் படங்களின் பாடல்கள், டீசர்கள், டிரைலர்கள் ஆகியவைதான் எப்போதும் யூடியூபில் அதிக சாதனைகளைப் படைக்கும். அவற்றோடு ஒப்பிடும் போது மகேஷ் பாபு படங்கள் படைத்த சாதனைகள் குறைவாகவே இருக்கும்.

பீஸ்ட் படத்திற்குபின் நேரடி தெலுங்கு படமொன்றில் நடிக்க இருக்கும் விஜய்யை ட்ரோல் செய்து ஆந்திராவில் வீடியோக்கள் கடந்த வாரம் வெளியானது இதன் பின்னணியில் இருப்பவர்கள் அஜித்குமார் டீமா? என்று விஜய் ரசிகர்கள் சந்தேகப்பட்டனர். இந்நிலையில், விஜய்யை ட்ரோல் செய்யும் தெலுங்கு வீடியோக்கள் அதிகரித்துக் கொண்டே போனது. இதனால், தன்னை வைத்து நேரடி தெலுங்கு படம் தயாரிக்க இருக்கும் தயாரிப்பு தரப்பில் இதை சொல்லி, இதன் பின்னணியில் யார்? என கண்டறிந்து சொல்ல சொன்னது விஜய் தரப்பு.

அவர்களும் களமிறங்கி, அலசியதில் அதிர்ந்து போயுள்ளனர். காரணம், அதை செய்வது தெலுங்கு சினிமாவில் ‘ப்ரின்ஸ்’ என்றழைக்கப்படும் மகேஷ்பாபுவின் ரசிகர் மன்ற நிர்வாகிகளின் வேலைதான் என்கிற தகவல் தெரியவந்துள்ளது.

இதற்கு என்ன காரணம்? என்று விசாரித்தபோது. “இங்கே விஜய் போல் தெலுங்கில் மகேஷ்பாபுவுக்கு பல லட்சம் ரசிகர்கள். விஜய் எப்படி தன் உருவத்தை மாற்றிக் கொண்டு, புதுப்புது கெட்-அப்களிலெல்லாம் நடிக்காமல் சிம்பிளான லுக்கிலேயே சதம் அடிக்கிறாரோ அதேதான் மகேஷ்பாபுவும் அங்கே செய்வார். ஆனால் அதேவேளையில் மகேஷ்பாபு நடிப்பில் வெற்றிபெற்ற தெலுங்கு படங்கள் சிலவற்றை தமிழில் ரீமேக் செய்த போது அதில் கதாநாயகனாக விஜய் நடித்தார், அந்த படங்கள் தமிழகத்தில் ஹிட் அடித்தது. இதன் பின் மகேஷின் ரசிகர்கள் ‘எங்க ஆளை வெச்சுதான் விஜய் தமிழ்ல ஜெயிக்கிறார்’ என்று கிண்டல் செய்தனர்.

இதற்கு விஜய் ரசிகர்கள்நேரடி தமிழ்ப்படங்களில் விஜய் நடித்து வெற்றிபெற்ற படங்களை பட்டியலிட்டு, மகேஷ்பாபு ரசிகர்களுக்கு பதில் கூறினார்கள். அதன்பின்னரும் இரண்டு தரப்பினரும் சமூக வலைதளங்களில் அடிக்கடி சண்டையிட்டுக்கொள்வார்கள்.

குறிப்பாக இருவர் படங்களின் முதல் பார்வை மற்றும் பாடல்கள் வெளியாகும்போது, இந்த மோதல் உச்சத்தை எட்டும். முதல் பார்வை வெளியான நொடியிலிருந்து பத்துநொடிகளுக்குள் யார் வீடியோவுக்கு அதிக லைக்ஸ் கிடைக்கிறது? என்பதில் துவங்கி ஒவ்வொரு விஷயத்திலும் இரண்டு தரப்புக்கும் அப்படியொரு போட்டி வரும்.

ஆனால் எப்போதுமே விஜய்தான் இதில் முதல் இடத்தை பிடிப்பார். இப்படியொரு சூழலில்தான் விஜய்யின் பீஸ்ட் பட முதல்சிங்கிளும், மகேஷ்பாபுவின் ‘சர்க்காரு வாரி பாட்டா’வின் முதல் சிங்கிளும் இன்று(14.02.2021) வெளியாகும் என எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் வழக்கம் போல் விஜய்தான் என்று கமெண்ட்ஸ் விழுந்து வந்தது.

இந்த நிலையில்தான் நேரடியாக தெலுங்கு படத்தில் நடிக்கப்போகும் விஜய்யால் மகேஷ்பாபுவின் வளர்ச்சி, புகழ் சறுக்கலாம் என்பது அவரது ரசிகர்களின் எண்ணம். அதனால்தான் அவருக்கு எதிராக ட்ரோல் வீடியோக்களை ஆரம்பித்து இப்போதே அவருக்கு எதிர்ப்பலையை உருவாக்கிட முயல்கிறார்கள்” என கூறியிருக்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்.

இதற்கிடையில் கலாவதி பாடலை ஒரு நாள் முன்னதாக நேற்றே வெளியிட்டுவிட்டார்கள். நேற்று மாலை வெளியான இப்பாடல் அதற்குள் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. தென்னிந்தியப் படங்களில் மிக விரைவாக 12 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இதற்கு முந்தைய சாதனையான ‘புஷ்பா’ படத்தின் ‘ஓ அன்ட்டாவா…’ பாடல் தான் மிக விரைவாக 12 மில்லியன் சாதனையைப் படைத்திருந்தது.

விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் முதல் சிங்கிளான ‘அரபிக் குத்து’ இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. அதுபோன்று, வெளியான 10 நிமிடங்களில் 5 லட்சம் பார்வையாளர்களை கடந்தது ‘அரபிக் குத்து.

மகேஷ் பாபுவின் ‘கலாவதி’ பாடல் படைத்த சாதனையை அடுத்த ஒரு நாளைக்குள் விஜய்யின் ‘அரபிக்குத்து’ முறியடிக்குமா என்பது நாளைக்குள் தெரிந்துவிடும்.

**-இராமானுஜம்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *