மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 13 பிப் 2022

திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல்: புதிய தேதி!

திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல்: புதிய தேதி!

திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தலுக்கு புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல் ஜனவரி 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. வேட்புமனு தாக்கல், வாபஸ் என அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் தேர்தல் நடத்துவதற்குக் காவல் துறையும், சென்னை மாநகராட்சியும் அனுமதிக்கவில்லை.

இதனால் எப்போது தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடப்படாமல் தேர்தல் நடைமுறைகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவரும் சூழலில் மீண்டும் புதிய தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகத் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தேர்தல் அதிகாரி செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தேர்தல் கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதால் வரும் பிப்ரவரி 27ல் தேர்தல் நடைபெறும். காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கும். அதன் பின்னர் ஓட்டுகள் எண்ணப்படும். இசைக்கலைஞர்கள் சங்கத்தில் நடப்பதாக இருந்த தேர்தல், கே.கே.நகர், ராஜமன்னார் சாலையில் உள்ள சத்யா மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெறும்” என்று கூறப்பட்டுள்ளது.

-இராமானுஜம்

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

ஞாயிறு 13 பிப் 2022