மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 12 பிப் 2022

ஜெயம்ரவி நடிக்கும் 'அகிலன்' படத்தின் முதல் பார்வை போஸ்டர்!

ஜெயம்ரவி நடிக்கும் 'அகிலன்' படத்தின் முதல் பார்வை போஸ்டர்!

ஜெயம்ரவி இப்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கடுத்து அவர் நடிக்கவிருக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பும் முதல் பார்வையையும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக இன்று (பிப்ரவரி 12) அறிவித்தது.

ஜெயம்ரவியின் 28 ஆவது படமான இதை, ஏற்கெனவே ஜெயம்ரவியை வைத்து பூலோகம் படத்தை இயக்கிய இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் இயக்குகிறார். இந்தப்படத்திற்கு அகிலன் (King Of The Indian Ocean) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் அகிலன் திரைப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஹரீஷ் உத்தமன் நடிக்கிறார். சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். ஸ்கிரீன் சீன் நிறுவனத்துக்கு மூன்று படங்கள் நடிக்க ஜெயம்ரவி ஒப்புக்கொண்டுள்ளதாக கடந்த ஆண்டு செய்திகள் வெளியாகின. அவற்றில் முதல்படமாக அகிலன் படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அம்பலவாணன்

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

சனி 12 பிப் 2022