மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 12 பிப் 2022

வைரலாகும் அஜித், வினோத் புகைப்படம்!

வைரலாகும் அஜித், வினோத் புகைப்படம்!

இயக்குநர் வினோத், நடிகர் அஜித் மற்றும் படத்தின் சவுண்ட் இன்ஜினியர் என மூவரும் இடம் பெற்றுள்ள புகைப்படம் வைரலாகி உள்ளது.

'நேர்கொண்ட பார்வை' படத்திற்கு பிறகு ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் படம் 'வலிமை'. கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக படப்பிடிப்பு மற்றும் படத்தின் வெளியீடு தள்ளி போயிருந்தது.

கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் விடுமுறையை ஒட்டி, அதாவது ஜனவரி 13ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மீண்டும் ஒமிக்ரான் பரவல் வேகமெடுக்க தேதி குறிப்பிடப்படாமல் மீண்டும் பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு, தற்போது இந்த மாதம் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் கதாப்பாத்திரத்தில் அஜித், வில்லனாக கார்த்திகேயா, ஹீமா குரேஷி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்த நிலையில் இயக்குநர் வினோத், அஜித் மற்றும் படத்தின் சவுண்ட் இன்ஜினியர் மூவரும் சந்தித்து எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் படத்தின் இறுதி கட்ட பணிகளில் இருவரும் ஈடுபட்டு படத்தை பார்த்ததாக சொல்லப்படுகிறது. மேலும், அந்த புகைப்படத்தில் 'வலிமை' படத்தின் மொத்த நேரமாக 2 மணி நேரம் 35 நிமிடங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகும் 'வலிமை' படத்தின் அந்தந்த மொழி டிரைலர்கள் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் அஜித்தின் அடுத்த படத்தையும் ஹெச். வினோத்தே இயக்கவுள்ள நிலையில் அந்த படத்திற்கான பூஜை மற்றும் அறிவிப்பு அடுத்த மாதத்தில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆதிரா

ட்ரெண்டிங்கில் லீனா மணிமேகலை : என்ன காரணம்?

3 நிமிட வாசிப்பு

ட்ரெண்டிங்கில் லீனா மணிமேகலை : என்ன காரணம்?

சமந்தா போன்று கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி

2 நிமிட வாசிப்பு

சமந்தா போன்று கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி

ஐந்தாவது டெஸ்ட்: 257 ரன்கள் முன்னிலையில் இந்தியா!

4 நிமிட வாசிப்பு

ஐந்தாவது டெஸ்ட்: 257 ரன்கள் முன்னிலையில் இந்தியா!

சனி 12 பிப் 2022