மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 12 பிப் 2022

நிவின் பாலி நடிக்கும் ‘மஹாவீர்யார்’!

நிவின் பாலி நடிக்கும்  ‘மஹாவீர்யார்’!

புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.முகுந்தன் கதையிலிருந்து தழுவி உருவாகியிருக்கும்

படம் மஹாவீர்யார். நிவின் பாலி மற்றும் ஆஷிஃப் அலி ஜோடி நடித்திருக்கும், இப்படத்தை அப்ரித் ஷைனி இயக்கியிருக்கிறார். ஃபேண்டஸி, டைம் ட்ராவல், சட்ட நுணுக்கங்கள், சட்ட புத்தகங்களை மையமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

பிரமாண்டமான செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம், ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருக்குமென்று திரைப்படக்குழு கூறுகிறது.

பாலி ஜே ஆர் பிக்சர்ஸ் (Pauly Jr Pictures) நிறுவனம் சார்பில் நிவின் பாலி மற்றும் இந்தியன் மூவி மேக்கர்ஸ் (Indian Movie Makers) சார்பில் பி.எஸ்.சம்னாஸ் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

கொச்சியில் நேற்று நடைபெற்ற விழாவில் எழுத்தாளர் எம்.முகுந்தன் இப்படத்தின் முதல்பார்வையை வெளியிட்டார்.

திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குநர் அப்ரித் ஷைனி, ஆஷிஃப் அலி, ஷான்வி ஶ்ரீவஸ்தவா மற்றும் இணை தயாரிப்பாளர் பி.எஸ்.சம்னாஸ் ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்றனர். வர்த்தக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்ற 1983 மற்றும் ஆக்சன் ஹீரோ பிஜூ ஆகிய படங்களுக்குப் பிறகு நடிகர் நிவின் பாலி மற்றும் இயக்குநர் அப்ரித் ஷைனி இணைந்து பணியாற்றும் மூன்றாவது திரைப்படம் மஹாவீர்யார். இப்படம் கொரோனா கட்டுப்பாடுகள் நிலவிய கடுமையான காலகட்டத்தின் மத்தியில், ராஜஸ்தான், கேரளா ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் லால், லாலு அலெக்ஸ், சித்திக், ஷான்வி ஶ்ரீவஸ்தாவா, விஜய் மேனன், மேஜர் ரவி, மல்லிகா சுகுமாரன், கிருஷ்ண பிரசாத், சுராஜ் எஸ். குரூப். சுதீர் கரமனா, பத்மராஜன் ரதீஷ், சுதீர் பரவூர், கலாபவன் பிரஜோத், பிரமோத் வெலியனாடு, ஷைலஜா பி.அம்பு மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

அம்பலவாணன்

பெரிய நடிகர்களின் படங்களை மட்டுமே பார்க்கின்றனர்: கே.எஸ்.ரவிக்குமார் ...

2 நிமிட வாசிப்பு

பெரிய நடிகர்களின் படங்களை மட்டுமே பார்க்கின்றனர்: கே.எஸ்.ரவிக்குமார்

தனுஷின் தி கிரேமேன் ட்ரெய்லர்!

2 நிமிட வாசிப்பு

தனுஷின் தி கிரேமேன்  ட்ரெய்லர்!

முருகதாஸின் புதியபட அப்டேட்!

4 நிமிட வாசிப்பு

முருகதாஸின் புதியபட  அப்டேட்!

சனி 12 பிப் 2022