‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் டீசர் வெளியீடு!

entertainment

விக்னேஷ் சிவன் இயக்கி தயாரிக்கும் படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிக்கின்றனர். அடுத்த மாதம் இந்த படம் வெளியாகும் என அறிவித்துள்ள நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, படத்தில் ‘டூ டூ’, ‘நான் பிழை’ என இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த டீசரை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ராம்போவாக விஜய் சேதுபதி, கஜிட்டாவாக சமந்தா, கண்மணியாக நயன்தாரா நடிக்கின்றனர். ஒருவனுக்கு ஒரே சமயத்தில் இருவர் மீது காதல் வந்தால் என்ன ஆகும் என்பதுதான் கதை என தனது முந்தைய பேட்டிகளில் விக்னேஷ் சிவன் சொல்லியிருந்தார்.

அதுபோலவே தற்போது டீசரும் வெளியாகியுள்ளது. சமந்தா மற்றும் நயன்தாராவிடம் மாட்டி கொள்ளும் விஜய்சேதுபதி அவர்களிடம் மாட்டிக் கொண்டு சமாளிக்கும் காட்சியில் இருந்து இந்த ரகளையான டீசர் தொடங்குகிறது.

இந்த மாதம் படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படம் வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸூடன் இணைந்து செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் படத்தை தயாரித்து இருக்கிறது. ரெடின் கிங்ஸ்லே, பிரபு ஆகியோரும் படத்தில் நடித்திருக்கின்றனர். படத்திற்கு இசை அனிருத் என்பது குறிப்பிடத்தக்கது.

**ஆதிரா.**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *