மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 11 பிப் 2022

ரஜினியின் 169ஆவது படத்தை இயக்கப் போவது யார்?

ரஜினியின் 169ஆவது படத்தை இயக்கப் போவது யார்?

நடிகர் ரஜினிகாந்தின்169ஆவது படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார் என சன் பிக்சர்ஸ் நேற்று மாலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படம் பற்றிய வேறு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் 2018இல் நயன்தாரா நடிப்பில் வெளியான 'கோலமாவு கோகிலா' படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். பிளாக் காமெடி வகையில் சொல்லப்பட்ட 'கோலமாவு கோகிலா' வணிக சினிமாவை ரசிக்கும் தமிழ் சினிமா பார்வையாளர்களுக்கு புதுமையான அனுபவத்தையும், உரையாடல் மூலம் திரைக்கதையை நகர்த்தி செல்லும் பாணியும் பிடித்துப் போனது. இரண்டாவது படம் கடந்த வருடம் வெளியான டாக்டர் படம். 'கோலமாவு கோகிலா' போதைப் பொருள் கடத்தலை பற்றிய திரைக்கதை. டாக்டரில் பெண்கள், குழந்தைகள் கடத்தல். சீரியஸான பிரச்சினையான இதனை காமெடியுடன் இணைத்துக் கொடுத்திருந்தார். விமர்சகர்களால் டாக்டர் படம் கொண்டாடப்படவில்லை என்றாலும் சினிமா விரும்பிகளால் கொண்டாடப்பட்டது.

கொரோனா காலத்தில் வெளியான ’டாக்டர்’ சிவகார்த்திகேயனின் கடந்த பத்தாண்டுக் கால திரையுலக வாழ்க்கையில் 100 கோடி வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றுக்கொடுத்தது. இந்த இரண்டு படங்களை அடுத்து நெல்சன் திலீப்குமார் மூன்றாவதாக இயக்கி முடித்துள்ள படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், அனிருத் என நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ள 'பீஸ்ட்'. ஏப்ரல் 14ஆம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படம் வெளியாகும் முன்பே, இப்போது ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

சினிமா கனவில் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் விடாது போராடிய வேலூரைச் சேர்ந்த நெல்சன் திலீப்குமார், தான் இயக்கப்போகும் நான்காவது படம் ரஜினிகாந்துடன் என்பது அவரே எதிர்பாராதது என்றே கூறலாம். மூன்று தலைமுறை சினிமா ரசிகர்கள் விரும்பி ரசித்த முதல் நிலை நட்சத்திரங்களான ரஜினிகாந்த், விஜய், சிவகார்த்திகேயன் மூவரும் ஒரே மேடையில் தோன்றிய ஒரு விருது நிகழ்ச்சியை 2016இல் இயக்குநராக இருந்து இதே சன் தொலைக்காட்சிக்காக இயக்கியவர் நெல்சன் திலீப்குமார்.

இன்று அதே நெல்சன் திலீப்குமார் அதே மூன்று தலைமுறை நட்சத்திர நடிகர்களை தனது நாயகர்களாக அடுத்தடுத்து இயக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். தமிழ் சினிமாவில் இது வேறு எந்த இயக்குநருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு. ரஜினிகாந்த் 169ஆவது படத்திற்கு வழக்கம்போல் நெல்சனுக்கு முதல் சினிமா வாய்ப்பை பெற்றுத்தந்த அனிருத் இசையமைக்கிறார். படத்தின் பிற நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களை முடிவு செய்யும் பொறுப்பு நெல்சன் திலீப்குமார் விருப்பத்திற்கு விடப்பட்டுள்ளது. காரணம், படத்தை 75 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்து முடிக்கும் பொறுப்பு இயக்குநர் நெல்சன் திலீப்குமாருடையது. தயாரிப்பு, செலவு விஷயங்களில் சன் பிக்சர்ஸ் தலையிடாது. ரஜினிகாந்த் சம்பளம் 75 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. ஆக 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ரஜினிகாந்த் 169ஆவது படம் தயாராக உள்ளது.

அம்பலவாணன்

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

5 நிமிட வாசிப்பு

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

3 நிமிட வாசிப்பு

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

வெள்ளி 11 பிப் 2022