மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 10 பிப் 2022

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபுதேவா - வடிவேலு கூட்டணி!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபுதேவா - வடிவேலு கூட்டணி!

காதலன் படத்தில் பிரபுதேவா - வடிவேலு இணைந்து நடித்தனர். அதைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் இணைந்து நடித்திருந்தாலும் பிரபுதேவாவின் நடன இயக்கத்தில் வடிவேலு நடிக்க கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை. காரணம் காமெடி நடிகரான வடிவேலுவுக்குத் தனித்த நடனங்கள், பாடல் காட்சிகள் நாகேஷுக்குக் கிடைத்தது போன்று இயக்குநர்களால் உருவாக்கப்படவில்லை. 2006ஆம் ஆண்டு இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தில் நாயகனாக நடித்தார் வடிவேலு. அதன்பின் இரண்டு படங்கள் மட்டுமே கதாநாயகனாக நடித்தார். நீண்ட வருட இடைவெளிக்குப் பின் வடிவேலு தற்போது நடிக்கத் தொடங்கியிருக்கிறார். அதனால் படத்தின் தலைப்பு முதல் அனைத்து விஷயங்களிலும் பிரமாண்டம், தனித்தன்மை இருக்க வேண்டும் என்பதில் வடிவேலு கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார் வடிவேலு. இதில் பிரியா பவானி சங்கர், ஷிவானி, ரெடிங் கிங்ஸ்லி, ஆனந்தராஜ் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயண் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது சென்னையில் வடிவேலு நடிக்கும் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் பாடலுக்கு பிரபுதேவா நடன இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். திரைப்பட இயக்குநர், நடிகர் என இந்தியிலும், தமிழிலும் பயணித்து வரும் பிரபு தேவா இந்தியாவில் முன்னணி நடன இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். நடிப்பு, இயக்கம் என பிசியான பிரபுதேவா நடன இயக்குநராகப் பணியாற்றுவதைக் குறைத்துக்கொண்டார். தற்போது வடிவேலுவின் தனிப்பட்ட வேண்டுகோளை ஏற்று நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடன இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.

இராமானுஜம்

சிம்பு தான் வேணும்: ஸ்ரீநிதி

4 நிமிட வாசிப்பு

சிம்பு தான் வேணும்: ஸ்ரீநிதி

இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்?

3 நிமிட வாசிப்பு

இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்?

மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கும் நிலை!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கும் நிலை!

வியாழன் 10 பிப் 2022