மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 9 பிப் 2022

தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் பிக்பாஸ் அல்டிமேட்!

தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் பிக்பாஸ் அல்டிமேட்!

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஓடிடி வடிவமான 'பிக்பாஸ் அல்டிமேட்' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து தெலுங்கிலும் பிக்பாஸ் ஓடிடி தொடங்க இருக்கிறார்கள்.

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஓடிடி வடிவமான பிக்பாஸ் அல்டிமேட் ஐந்து சீசன்களை முடித்த பிக் பாஸ் போட்டியாளர்களில் சிலர் இதில் கலந்துகொண்டு விளையாடுகிறார்கள். இந்த பிக் பாஸ் அல்டிமேட் இப்போது டிஸ்னி ஹாட்ஸ்டார் செயலியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு வாரம் முடிவடைந்த நிலையில் ஆரம்பித்த முதல் நாளில் இருந்தே சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

முதல் வாரம் எலிமினேஷன் , சர்ச்சைக்குரிய காட்சிகள் எந்த வித எடிட்டும் இல்லாமல் ஒளிபரப்பானது என கண்டெண்ட்டுக்கு பஞ்சமில்லாமல் நிகழ்ச்சி பேசு பொருளாகி இருக்கிறது.

ஏற்கனவே, இந்தியில் 13 சீசன்களை பிக்பாஸ் முடித்திருக்கிறது. மேலும் பிக்பாஸ் ஓடிடியும் அங்கு பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

தமிழிலும் இப்போது நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து தெலுங்கிலும் பிக்பாஸ் ஓடிடி வடிவம் தொடங்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்குகிறார். இவரே பிக்பாஸ் தெலுங்கின் ஓடிடி வடிவத்தையும் தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் ஓடிடியை தொகுத்து வழங்கவும் அதே சம்பளம் அவருக்கு பேசப்பட்டிருக்கிறது. பிக்பாஸ் தெலுங்கின் முந்தைய சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்களே பிக்பாஸ் ஓடிடியிலும் பங்கேற்க இருக்கிறார்கள். நிகழ்ச்சிக்கு 15 போட்டியாளர்கள் தேர்வு செய்திருக்கிறார்கள். இந்த மாதம் 26ம் தேதியில் இருந்து பிக் பாஸ் ஓடிடி தெலுங்கில் ஒளிபரப்பாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதிரா

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

புதன் 9 பிப் 2022