மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 8 பிப் 2022

அமிதாப் பச்சன் - எஸ்.ஜே.சூர்யா இணையும் திரைப்படம்!

அமிதாப் பச்சன் - எஸ்.ஜே.சூர்யா இணையும் திரைப்படம்!

அமிதாப் பச்சன், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவான பாதியில் கைவிடப்பட்ட திரைப்படம் மீண்டும் தொடங்குகிறது.

அமிதாப் பச்சன் முதன்முறையாக நேரடி தமிழில் நடிக்கும் திரைப்படம் 'உயர்ந்த மனிதன்'. இந்தப் படம் குறித்தான அறிவிப்பு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வந்தது. இயக்குநர் தமிழ்வாணன் இயக்கும் இந்தப் படம் இந்தியிலும் 'தி கிரேட் மேன்' என்ற பெயரில் உருவாக்க இருப்பதாகவும் அப்போது அறிவித்தார்கள்.

இதில் அமிதாப் பச்சன் தந்தை கதாபாத்திரத்திலும், எஸ்.ஜே.சூர்யா மகன் கதாபாத்திரலும் என தந்தை - மகன் தொடர்பான கதையாக இருக்கும் எனவும் அறிவித்தார்கள்.

ஆனால், முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்த நேரத்தில் தயாரிப்பு தரப்புக்கும், அமிதாப் பச்சனுக்கும் கால்ஷீட் மற்றும் சம்பளம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அப்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

பின்பு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அமிதாப் பச்சனை கதைக்குள் அழைத்து வந்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

முன்பு பிரச்சினை ஆன தயாரிப்பு நிறுவனம் கதையில் இருந்து ஒதுங்க, படத்தைத் தயாரிக்க புதிய தயாரிப்பு நிறுவனம் உள்ளே வந்திருக்கிறது எனவும் அதற்கான ஒப்பந்த நகலை பொதுவில் வெளியிட்டு நடிகர் எஸ்.ஜே.சூர்யா இந்தத் தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதிரா

தியேட்டர் பாணியில் ஓடிடி!

5 நிமிட வாசிப்பு

தியேட்டர் பாணியில் ஓடிடி!

ரஜினி பட ஹீரோயின்கள்: சர்ச்சையான ஆர்.ஜே.பாலாஜியின் பேச்சு!

3 நிமிட வாசிப்பு

ரஜினி பட ஹீரோயின்கள்: சர்ச்சையான  ஆர்.ஜே.பாலாஜியின் பேச்சு!

பாலியல் குற்றச்சாட்டு: நடிகர் தலைமறைவு!

3 நிமிட வாசிப்பு

பாலியல் குற்றச்சாட்டு: நடிகர் தலைமறைவு!

செவ்வாய் 8 பிப் 2022