மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 7 பிப் 2022

முதல் ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா!

முதல் ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா!

ரோஹித் சர்மாவின் ரன் குவிப்பு, சாஹலின் விக்கெட்டுகளால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று (பிப்ரவரி 6) நடைபெற்றது. இந்தப் போட்டி இந்தியாவின் 1,000ஆவது ஒருநாள் போட்டி என்பதால் கூடுதல் கவனத்தை ஈர்த்திருந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 43.5 ஓவரில் 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் ஜெசன் ஹோல்டர் அரை சதம் அடித்து 57 ரன்னில் அவுட்டானார்.

ஒருகட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 79 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்து இறங்கிய ஹோல்டர் - ஆலன் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களைக் கடந்தது.

இந்தியா சார்பில் சாஹல் 4 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளும் ப்ரிசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளும், சிராஜ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மாவும், இஷான் கிஷணும் களமிறங்கினர்.

ஆரம்பம் முதல் ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி அரை சதமடித்தார். முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்த நிலையில் ரோஹித் சர்மா 60 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய விராட் கோலி 8 ரன்னிலும், இஷான் கிஷண் 29 ரன்னிலும், ரிஷப் பண்ட் 11 ரன்னிலும் அவுட்டாகினர்.

தொடர்ந்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் - தீபக் ஹூடா ஜோடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டது. இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

இறுதியில், இந்தியா 28 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. தீபக் ஹூடா 26 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 34 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி இதே அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பார்வையாளர்களின் அனுமதி இல்லாமல் 9ஆம் தேதி நடைபெறுகிறது.

-ராஜ்

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

5 நிமிட வாசிப்பு

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

3 நிமிட வாசிப்பு

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

திங்கள் 7 பிப் 2022