மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 5 பிப் 2022

இரட்டை வேடங்களில் நடிக்கும் தன்ஷிகா

இரட்டை வேடங்களில் நடிக்கும் தன்ஷிகா

மகேஷ்வரன் நந்தகோபால் சூர்யா பிலிம் புரடக்ஸன்ஸ் நிறுவனம் சார்பில், அஜி ஜான், I.M.விஜயன் ஆகியோரது நடிப்பில் பயஸ் ராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் " சிட்தி " படத்தை தமிழ், மலையாளம் இருமொழிகளிலும் தயாரித்துள்ளார். இதை தொடர்ந்து தற்போது தன்ஷிகா முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கும் " மனோகரி " என்ற படத்தை தயாரிக்கிறார்.

முக்கிய வேடத்தில் கவிஞர் சினேகன் மனைவி கன்னிகா சினேகன் நடிக்கிறார். மற்றும் இளவரசு, ஆதித்யா கதிர், பிஜிலி ரமேஷ், ஜீவன் பாண்டியன், குடந்தை முத்து இவர்களுடன் பிரபலமான கராத்தே மணியின் மகன் ராஜ்குமார் தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார். ஆண்டி இந்தியன் ஜெயராஜ், தியேட்டர் ஆர்டிஸ்ட் ஜெகதீஸ்வரன், ஜாஹீர் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு கே.வி.மணி, கார்த்திக் ராஜா இசையமைக்க, படத்தின் அனைத்து பாடல்களையும் சினேகன் எழுதியிருக்கிறார். கதை, திரைகக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் நவாஸ் அஹமது.

படம் பற்றி இயக்குனர் நவாஸ் அகமது கூறுகையில், “நடிகர் திலகம் சிவாஜிக்கு மனோகரா போல் நடிகை தன்ஷிகாவுக்கு மனோகரி. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற மனோகரா திரைப்படத்தை போலவே, இன்றைய நவீன தொழிட்நுட்பங்களை பயன்படுத்தி VFX காட்சிகள் நிறைந்த மனோகரி திரைப்படத்தை உருவாக்கி வருகிறோம். இதுவரை தன்ஷிகா நடித்திராத கதாபாத்திரம் இந்த படத்தில். செண்டிமெண்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் படம் இது.

படப்பிடிப்பு கம்பத்தில் நேற்று பூஜையுடன் துவங்கியுள்ளது. தொடர்ந்து கொடைக்கானல் மற்றும் திண்டுக்கல் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற உள்ளது” என்றார்.

இராமானுஜம்

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

சனி 5 பிப் 2022