மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 4 பிப் 2022

பொள்ளாச்சி சம்பவத்தை அடிப்படையாக கொண்டதா ‘எதற்கும் துணிந்தவன்’?

பொள்ளாச்சி சம்பவத்தை அடிப்படையாக கொண்டதா ‘எதற்கும் துணிந்தவன்’?

‘எதற்கும் துணிந்தவன்’ கதைக்களம் பொள்ளாச்சி சம்பவத்தை அடிப்படையாக கொண்டதா, இல்லையா என்பது குறித்து இயக்குநர் பாண்டிராஜ் விளக்கம் கொடுத்துள்ளார்.

சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ் என பலரும் நடித்துள்ள திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் கதை குறித்து தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் பாண்டிராஜ் மனம் திறந்துள்ளார்.

பொள்ளாச்சி சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதைதான் ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற தகவல் சமூக வலைதளங்களில் முன்பு வெளியானது. உண்மையிலேயே ‘எதற்கும் துணிந்தவன்’ அந்த கதை தானா என்ற கேள்வி கேட்கப்பட்ட போது, ‘நிறைய பேர் இப்படிதான் சொல்லி வருகிறார்கள். உண்மையில் ‘எதற்கும் துணிந்தவன்’ கதைக்களத்திற்கும் பொள்ளாச்சி சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஆனால், பெண்கள் குறித்தான பிரச்சனையை நிச்சயம் இந்த படம் பேசும். பெண்களுக்கான பிரச்சனை பொள்ளாச்சியில் மட்டுமா நடக்கிறது? உலகம் முழுவதுமே இருக்கிறதே?

அந்த பிரச்சனைகளையும் அதற்கான சில தீர்வுகளையும், பெண்கள் ஆண்கள் கிட்டயும், ஆண்களிடம் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற விஷயங்களையும் இதில் பேசி இருக்கிறோம். நிச்சயம் இது குடும்பங்களுக்கும் பிடிக்கும் கதையாக இருக்கும்’ என அந்த பேட்டியில் இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார் .

ஆதிரா.

ட்ரெண்டிங்கில் லீனா மணிமேகலை : என்ன காரணம்?

3 நிமிட வாசிப்பு

ட்ரெண்டிங்கில் லீனா மணிமேகலை : என்ன காரணம்?

சமந்தா போன்று கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி

2 நிமிட வாசிப்பு

சமந்தா போன்று கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி

ஐந்தாவது டெஸ்ட்: 257 ரன்கள் முன்னிலையில் இந்தியா!

4 நிமிட வாசிப்பு

ஐந்தாவது டெஸ்ட்: 257 ரன்கள் முன்னிலையில் இந்தியா!

வெள்ளி 4 பிப் 2022