மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 4 பிப் 2022

பாடலாசிரியர் அவதாரம் எடுத்த பிரியா பவானி சங்கர்

பாடலாசிரியர் அவதாரம் எடுத்த பிரியா பவானி சங்கர்

நடிகை பிரியா பவானி சங்கர் தனக்குள்ள பாடல் எழுதும் ஆர்வத்தை தற்போது தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

சின்னத்திரை டூ பெரிய திரை பயணத்தில் வெற்றிகரமாக தன்னுடைய பாதையை உருவாக்கி வைத்திருப்பவர்களில் பிரியா பவானி சங்கரும் ஒருவர். செய்தி வாசிப்பாளர், தொகுப்பாளர், சின்னத்திரை நடிகை என பயணித்தவர் ‘மேயாத மான்’ திரைப்படம் மூலமாக கடந்த 2017ல் கதாநாயகியாக சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தார்.

’மான்ஸ்டர்’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘கசட தபற’, ‘ஓ மணப்பெண்ணே’ என தான் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதையையும் வித்தியாசமாகவும் தன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும்படியாகவும் பார்த்து கொள்வார். அதே போல, சமூக வலைதளங்களிலும் பிரியா பவானி ஷங்கர் பயங்கர ஆக்டிவ். தன்னை கேலி செய்து பதிவிடுபவர்களுக்கு சரியான பதிலடி கொடுப்பது, அவ்வப்போது தமிழில் கவிதைகள் பகிர்வது என எப்போதுமே ஆக்டிவாக இருப்பார்.

அந்த வகையில் நேற்று தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இயற்கை காட்சி புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்த பிரியா பவானி சங்கர், அதற்கு கேப்ஷனாக கவிதை ஒன்றையும் எழுதி இருக்கிறார்.

‘மெளனம் பகிர்ந்து,

கை விரல் பிடித்து

கதை பேசிய இரவு விடியாமலே போயிருந்தால்தான் என்ன?

உனக்கு மட்டுமே கேட்ட

என் மனம் இசைத்த

இந்த பாடல்

மொழி தேடாமல் உன்னோடே சேர்ந்து தூரம் போனது.

வரிகளற்ற என் பாடலை

திருப்பி கொடு.

இம்முறை என் மெளனம் புரிய என்னிடம் ‘நாம்’ இல்லை.

வார்த்தைகளை நிரப்பி நானே வைத்து கொள்கிறேன்’

என பதிவிட்டு அதன் கீழே வரிகள் மற்றும் இசை பிரியா பவானி ஷங்கர். சீக்கிரமே வெளியாக இருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்கள் பிரியாவின் இந்த பதிவிற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் ’பத்து தல’, ‘யானை’, ‘குருதி ஆட்டம்’, ‘திருச்சிற்றம்பலம்’ என பல படங்கள் வெளிவர காத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

5 நிமிட வாசிப்பு

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

3 நிமிட வாசிப்பு

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

வெள்ளி 4 பிப் 2022