மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 3 பிப் 2022

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்: ரசிகர்களுக்கு அனுமதி இல்லை!

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்: ரசிகர்களுக்கு அனுமதி இல்லை!

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் பல்வேறு இடங்களில் கட்டுப்பாடுகளும் தளர்வுகளும் இருக்கும் நிலையில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

தென்னாப்பிரிக்க தொடர் ஏமாற்றத்துடன் முடிவடைந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெறும் தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. இதன்படி ஒருநாள் தொடர் வரும் 6ஆம் தேதி அன்றும் டி20 தொடர் பிப்ரவரி 16ஆம் தேதியன்றும் தொடங்குகின்றன.

ஒருநாள் தொடர் அகமதாபாத்திலும், டி20 தொடர் கொல்கத்தாவிலும் நடைபெற உள்ளன. முன்னதாக கொல்கத்தாவில் நடைபெறும் மூன்று டி20 ஆட்டங்களுக்கும் 75 சதவிகித ரசிகர்களை அனுமதிக்க மேற்கு வங்காள அரசு முடிவெடுத்துள்ளது. விளையாட்டு அரங்குகளில் 75 சதவிகித ரசிகர்கள் அனுமதியுடன் போட்டிகள் நடக்கலாம் என மேற்கு வங்காள அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் 50,000 ரசிகர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக அகமதாபாத்தில் நடைபெற உள்ள மூன்று ஒருநாள் போட்டிகளிலும் ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என குஜராத் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும் குஜராத் கிரிக்கெட் சங்கம் தனது ட்விட்டரில், “2022ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை நடத்தத் தயாராக உள்ளோம். பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெறும் முதல் ஒருநாள் போட்டி மிகவும் சிறப்பான மற்றும் வரலாற்றுப் போட்டியாக இருக்கும், ஏனெனில் இந்தியா தனது 1000ஆவது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இந்த சாதனையை நிகழ்த்தும் உலகின் முதல் கிரிக்கெட் அணி என்ற பெருமையை இந்திய அணி பெறும்” என்று அதில் பதிவிட்டுள்ளது.

-ராஜ்

ட்ரெண்டிங்கில் லீனா மணிமேகலை : என்ன காரணம்?

3 நிமிட வாசிப்பு

ட்ரெண்டிங்கில் லீனா மணிமேகலை : என்ன காரணம்?

சமந்தா போன்று கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி

2 நிமிட வாசிப்பு

சமந்தா போன்று கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி

ஐந்தாவது டெஸ்ட்: 257 ரன்கள் முன்னிலையில் இந்தியா!

4 நிமிட வாசிப்பு

ஐந்தாவது டெஸ்ட்: 257 ரன்கள் முன்னிலையில் இந்தியா!

வியாழன் 3 பிப் 2022