மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 3 பிப் 2022

சினிமாவில் பத்து ஆண்டுகள் நிறைவு: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

சினிமாவில் பத்து ஆண்டுகள் நிறைவு: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

சினிமா துறைக்குள் நுழைந்து இன்றோடு பத்து ஆண்டுகள் நிறைவு செய்ததை அடுத்து சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியான குறிப்பு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

’மெரினா’ படம் மூலமாக சினிமாவுக்குள் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். சினிமாவில் இன்றோடு தனது பத்தாண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து நெகிழ்ச்சியான நன்றி குறிப்பு ஒன்றை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, "இன்றோடு சினிமாவில் பத்தாண்டுகள் நிறைவடைந்தது. நம்பிக்கையை மட்டுமே மூலதனமாக கொண்டு இந்த பயணத்தை தொடங்கினேன். அப்படி தொடங்கிய என்னுடைய பயணத்திற்கு இன்று உங்கள் இல்லங்களிலும் இதயங்களிலும் நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இடம் நான் நினைத்து கூட பார்த்திராத நிஜம். இந்த தருணத்தில் எனக்கு முதல் பட வாய்ப்பு கொடுத்த இயக்குநர் பாண்டிராஜ் அவர்களுக்கும், அத்தனை தயாரிப்பாளர்களுக்கும் உடன் நின்று பயணித்த இயக்குநர்களுக்கும், தன்னோடு சேர்த்து என்னையும் மிளிரச் செய்த என் சக கலைஞர்களுக்கும், என் படங்களில் பணியாற்றிய அத்தனை தொழிலாளர்களுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும், பத்திரிக்கை, தொலைக்காட்சி, இணையதள நண்பர்களுக்கும், அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்’ என நெகிழ்ச்சியான நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.

இதுமட்டுமல்லாமல், தாய்த்தமிழுக்கும், என்னை மகனாக, சகோதரனாக, நண்பனாக, குடும்பமாக ஏற்றுக்கொண்ட தமிழ் மக்களுக்கும் என் ஆரம்பகாலம் முதல் என்னுடைய வெற்றி- தோல்வி அனைத்திலும் உடனிருந்து என்னை கொண்டாடும் ரசிகர்களான என் சகோதர சகோதரிகளுக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் எப்போதும் நான் செய்ய நினைப்பதெல்லாம் இன்னும் கடினமாக உழைத்து உங்களை மகிழ்விப்பதும், நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இந்த வாழ்வை பிறருக்கும் பயன்படுமாய் வாழ்வதும் மட்டுமே! என அந்த பதிவில் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

கடந்த 2010ல் ‘மெரினா’ படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயன் அதன் பிறகு ‘மனம் கொத்தி பறவை’, ‘எங்கள் வீட்டு பிள்ளை’, ‘டாக்டர்’ என அடுத்தடுத்து கமர்ஷியல் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் ‘கனா’ போன்ற வெற்றி படங்களை கொடுத்துள்ளார். சின்னத்திரையில் ஸ்டாண்டப் காமெடியனாக உள்ளே நுழைந்து, பின்பு தொகுப்பாளராக உயர்ந்து, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

ஆதிரா

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

வியாழன் 3 பிப் 2022