புனீத் ராஜ்குமார் குடும்பத்தினரை சந்தித்த அல்லு அர்ஜூன்

கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் நடிகர் அல்லு அர்ஜூன்.
46 வயதான கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார், கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனையொட்டி, அவரது உடலுக்கு பொதுமக்களும் திரைத்துறையினரும் காண்டிவரா மைதானத்தில் அஞ்சலி செலுத்தினர். படப்பிடிப்புகளால் பல நடிகர்கள் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வர முடியவில்லை.
நடிகர் சூர்யா, ராம் சரண், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், விஷால், கமல்ஹாசன், சரத்குமார் மற்றும் பலர் புனீத் ராஜ்குமார் குடும்பத்தினரை பல்வேறு சமயங்களில் நேரில் சந்தித்து தங்கள் வருத்தங்களை பகிர்ந்து கொண்டனர். அந்த வரிசையில் நடிகர் அல்லு அர்ஜூனும் இன்று புனீத் ராஜ்குமாரின் அண்ணன் சிவராஜ்குமாரையும், அவரது குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இராமானுஜம்