மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 2 பிப் 2022

'ராதே ஷ்யாம்’ புதிய வெளியீட்டு தேதி!

'ராதே ஷ்யாம்’ புதிய வெளியீட்டு தேதி!

தெலுங்கு முன்னணி நடிகர் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவரும் பூஜா ஹெக்டேவும் இணைந்து நடித்துள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. முழுக்க முழுக்க காதல் கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த படம் கொரோனா சூழல் காரணமாக வெளியீடு தள்ளிப்போனது. இப்போது கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து பல பெரிய படங்களின் வெளியீடுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் பிரபாஸ், பூஜா ஹெட்டேவின் ‘ராதே ஷ்யாம்’ அடுத்த மாதம் அதாவது மார்ச் 11 அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை யுவி கிரியேஷன் தயாரித்துள்ளது. நீண்ட நாட்கள் கழித்து ஒரு முழு நீள காதல் கதையில் பிரபாஸ் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் விக்ரம் ஆதித்யா என்ற கைரேகை நிபுணராக பிரபாஸ் நடித்துள்ளார்.

இப்படத்தின் டிரெய்லர், பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன. படத்திற்கு இசை ஜஸ்டின் பிரபாகர். படத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே தவிர பாக்கிய ஸ்ரீ, சச்சின் ஹெடெக்கர், குணால் ராய் கபூர், ஜெகபதி பாபு, ப்ரியதர்ஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் கையாண்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் பான் இந்தியா படமாக 'ராதே ஷியாம்' வெளியாகவுள்ளது. இதனை ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ஆதிரா

லெஜண்ட் சரவணாவால் குழப்பமான சூர்யா ரசிகர்கள்!

3 நிமிட வாசிப்பு

லெஜண்ட் சரவணாவால் குழப்பமான சூர்யா ரசிகர்கள்!

தெலங்கானா முதல்வரைச் சந்தித்த விஜய்

2 நிமிட வாசிப்பு

தெலங்கானா முதல்வரைச் சந்தித்த விஜய்

இரண்டாவது திருமணம் குறித்து டி.இமான்

4 நிமிட வாசிப்பு

இரண்டாவது திருமணம் குறித்து டி.இமான்

புதன் 2 பிப் 2022