மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 பிப் 2022

நிவின் பாலி படத்தில் சூரி

நிவின் பாலி படத்தில் சூரி

கற்றதுதமிழ் ராம் இயக்கத்தில் மம்முட்டி, அஞ்சலி, சாதனா உள்ளிட்டோர் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான படம் ‘பேரன்பு’.

இந்தப் படத்துக்குப்பின் மிஷ்கின் இயக்கிய 'சைக்கோ' படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் ராம் நடித்திருந்தார். இந்நிலையில் நிவின் பாலி - அஞ்சலி இணையும் புதிய படத்தினை இயக்கி வருகிறார் ராம்.

இப்படத்தை மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் கமாட்சி தயாரிக்கிறார். கடந்த ஆண்டு இதன் படப்பிடிப்பு தனுஷ்கோடியில் துவங்கிய நிலையில், படப்பிடிப்பில் நடிகர் சூரி இன்று இணைந்துள்ளார்.

இதுகுறித்து, நடிகர் சூரி கூறுகையில், “இன்று இனியதொரு தொடக்கம். இயக்குநர் அண்ணன் ராம் மற்றும் பிரதர் நிவின் பாலியுடன் முதல்முறையாக 'பயணிப்பதில்' பெரு மகிழ்ச்சி. அண்ணன் சுரேஷ் காமாட்சிக்கு நன்றி” என்று இருவருடனும் இருக்கும் புகைப்படங்களைப் உற்சாகமுடன் பகிர்ந்திருக்கிறார்.

-இராமானுஜம்

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

செவ்வாய் 1 பிப் 2022