மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 பிப் 2022

தள்ளிப்போன டான் வெளியீடு!

தள்ளிப்போன டான் வெளியீடு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் “டான்”. புது இயக்குநர் சிபிசக்கரவர்த்தி இயக்கியிருக்கிறார். ‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன் இந்தப் படத்தில் மீண்டும் அவருடன் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப்படத்தின் வெளியீட்டுத் தேதியை நேற்று நல்ல நேரம் பார்த்து( 31.01.2022)

காலை பத்து மணி பத்து நிமிடத்தின்போது மார்ச் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு வெளியானது முதல் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதனைப் பகிர்ந்து கொண்டாடி வந்தார்கள். ஆனால், அவர்களுடைய மகிழ்ச்சி சில மணி நேரங்கள் கூட நீடிக்கவில்லை.

ஏற்கெனவே மார்ச் 18 அல்லது ஏப்ரல் 28 என்று சொல்லியிருந்த ராஜமெளலியின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் ஆர்ஆர்ஆர் படக்குழு, மார்ச் 25 ஆம் தேதி ஆர்ஆர்ஆர் வெளியாகிறது என்று அறிவித்தார்கள். அந்தப்படத்தையும் தமிழில் லைகா நிறுவனமே வெளியிடவிருக்கிறது. லைகாவின் காலை அறிவிப்பைக் கணக்கில் கொள்ளாமல் ஆர்ஆர்ஆர் படக்குழு தேதியை அறிவித்துவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த லைகா நிறுவனம் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், டான் படத்தின் வெளியீட்டுத் தேதியைத் தள்ளி வைக்க முடிவு செய்திருக்கிறதாம்.

அடுத்து ஏப்ரல் 14 ஆம் தேதியன்று விஜய்யின் பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் 2 ஆகிய படங்கள் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் ஏப்ரல் 28 ஆம் தேதி டான் படத்தை வெளியிட லைகா நிறுவனம் முடிவு செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அம்பலவாணன்

ட்ரெண்டிங்கில் லீனா மணிமேகலை : என்ன காரணம்?

3 நிமிட வாசிப்பு

ட்ரெண்டிங்கில் லீனா மணிமேகலை : என்ன காரணம்?

சமந்தா போன்று கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி

2 நிமிட வாசிப்பு

சமந்தா போன்று கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி

ஐந்தாவது டெஸ்ட்: 257 ரன்கள் முன்னிலையில் இந்தியா!

4 நிமிட வாசிப்பு

ஐந்தாவது டெஸ்ட்: 257 ரன்கள் முன்னிலையில் இந்தியா!

செவ்வாய் 1 பிப் 2022