மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 பிப் 2022

தனுஷின் ‘நானே வருவேன்’ இசைப்பணியை முடித்த யுவன்

தனுஷின் ‘நானே வருவேன்’ இசைப்பணியை முடித்த யுவன்

தனுஷ் நடித்து வரும் ‘நானே வருவேன்’ படத்தின் இசைப்பணிகள் தற்போது முடிந்துள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ’நானே வருவேன்’. இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன் தயாரிக்கிறது. இந்த படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடிக்கிறார். ஒளிப்பதிவாளராக யாமினி பணிபுரிந்து வருகிறார். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது படத்தின் இசையமைப்பு பணிகள் முடிந்து விட்டதாக இயக்குநர் செல்வராகவன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ‘நானே வருவேன்’ படத்தின் ஆல்பத்தை தற்போதுதான் யுவன் முடித்தார். உங்களுடன் சீக்கிரமே பகிர்ந்து கொள்வதில் ஆர்வமாக உள்ளேன்’ என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

‘மயக்கம் என்ன’ படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பிறகு செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் ‘நானே வருவேன்’ என்பதால் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்ப்பார்த்துள்ளனர். இது மட்டுமல்லாமல் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகமும் 2024ல் வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

செல்வராகவன் தற்போது இயக்கம் மட்டுமல்லாமல், ‘சாணிக்காயிதம்’, ‘பீஸ்ட்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் தனுஷ் கைவசம் தற்போது ‘மாறன்’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘வாத்தி’ உள்ளிட்ட படங்கள் இருக்கின்றன. இதில் கார்த்திக் நரேன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாறன்’ படத்தில் பத்திரிக்கையாளர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் நேரடியாக ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

தனுஷ் தற்போது ‘வாத்தி’ படத்தின் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் உள்ளார். இது தெலுங்கில் தனுஷ் நேரடியாக நடிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதிரா

வாழ்க்கை ஒரு கனவுதானே: ஏ.ஆர்.ரஹ்மான்

2 நிமிட வாசிப்பு

வாழ்க்கை ஒரு கனவுதானே: ஏ.ஆர்.ரஹ்மான்

சாய் பல்லவி படத்தை வெளியிடும் சூர்யா ஜோதிகா

2 நிமிட வாசிப்பு

சாய் பல்லவி படத்தை வெளியிடும் சூர்யா ஜோதிகா

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

3 நிமிட வாசிப்பு

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

செவ்வாய் 1 பிப் 2022