மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 பிப் 2022

தளர்வுகள்: ரிலீஸுக்கு தயாராகும் படங்கள்!

தளர்வுகள்: ரிலீஸுக்கு தயாராகும் படங்கள்!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், பொங்கலை முன்னிட்டு ஒத்திவைக்கப்பட்ட தமிழ்ப் படங்களை, அடுத்தடுத்து ரிலீஸ் செய்யும் முயற்சியைத் தயாரிப்பாளர்கள் துரிதப்படுத்தியுள்ளனர்.

கொரோனா அதிகரிப்பால், கடந்த ஜனவரி 7ஆம் தேதி, இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கும் பிறப்பித்தது தமிழக அரசு. எனினும், முதல் இரண்டு அலைகளில் திரையரங்குகள் மூடப்பட்டதுபோல் இல்லாமல், 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. இந்தக் கட்டுப்பாடுகளால் வசூல் பாதிக்கும் என்பதால், பொங்கலை முன்னிட்டு வெளியிடும் நிலையில் இருந்த அஜித்தின் வலிமை, ஆர்.ஆர்.ஆர், ராதே ஷ்யாம் போன்ற பெரும்பாலான படங்களின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டன.

இந்த நிலையில், தற்போது மூன்று வாரங்களுக்குப் பிறகு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் தயாராகி வருகின்றனர். அந்தவகையில், விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டு, பின்னர் ஜனவரி 26ஆம் தேதி குடியரசுத் தின விழாவுக்கு வெளியிட படக்குழு தயாராகினர். ஆனால் அப்போதும் கொரோனா பரவலால், மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு தற்போது பிப்ரவரி 4ஆம் தேதி வெளியிடுவதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

இதேபோல், விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’, விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’ உள்ளிட்ட படங்கள் பிப்ரவரி 11ஆம் தேதி வெளியாகிறது. சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் ‘டான்’ மற்றும் உலகம் முழுவதும் சினிமா ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் ஆர்.ஆர்.ஆர் ஆகிய இரு படங்களும் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மிகவும் எதிர்பார்ப்புகள் நிறைந்த ‘வலிமை’ திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-இராமானுஜம்

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

செவ்வாய் 1 பிப் 2022