மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 31 ஜன 2022

தனுஷூக்காக ஹைதராபாத் சென்ற படக்குழுவினர்!

தனுஷூக்காக ஹைதராபாத் சென்ற படக்குழுவினர்!

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து முடித்திருக்கும் படம் மாறன். இந்தப்படத்தில் மாளவிகா மோகனன், ஸ்ம்ருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தனுஷ் 43 என்று சொல்லப்படும் இந்தப்படம் 2020 தொடக்கத்தில் தொடங்கப்பட்டபோது, 2020 அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது.

கொரோனா பொது முடக்கம் காரணமாக திரை துறையில் திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை. திரையரங்குகளில் 50% இருக்கை மட்டுமே அனுமதி மற்றும் எப்போது திரையரங்குகள் மூடப்படுமோ என்கிற பயம் காரணமாக நீண்டகாலமாக முடங்கி இருக்கும் படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன. அதேபோன்று தனுஷ் 43 படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக இணையதளத்தில் வெளியாக விருக்கிறது.

ஆனால், இதுவரை இப்படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாகச் சொல்லப்படவில்லை.

அதற்குக் காரணம், அண்மையில் தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினியைப் பிரிவதாக தனுஷ் அறிவித்ததுதான் காரணம் என்கிறார்கள். இருவரும் இணைந்து பிரிவை அறிவித்திருந்தாலும் தனுஷுக்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தனுஷ் மீதுள்ள கோபம் படத்தையும் பாதித்துவிடும் என்பதால் பட வெளியீட்டைத் தள்ளிப்போட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

அதேநேரம், தனுஷ் இன்னும் மாறன் படத்துக்கு டப்பிங் பேசவில்லையாம். அதனால் படம் முழுமையாகத் தயாராகாமல் இருக்கிறது. படத்தை முழுமையாகத் தயார் செய்து கொண்டால் எப்போது வேண்டுமானாலும் வெளியிட்டுக் கொள்ளலாம் என்று முடிவு செய்த தயாரிப்பு நிறுவனம், டப்பிங் பேசுவதற்காக தனுஷை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். தற்போது ஐதராபாத்தில் இருக்கும் தனுஷ், இப்போது என்னால் சென்னைக்கு வரமுடியாது என்று சொல்லிவிட்டாராம். அதற்குக் காரணம் சென்னை வந்தால் ரஜினிகாந்த் ரசிகர்களால் தாக்கப்படும் சூழல் உருவாகும் என்று தனுஷ்க்கு கூறப்பட்டுள்ளதே என்கின்றனர். அதனால் டப்பிங் வேலையை முடிக்க படக்குழு ஐதராபாத் போயிருக்கிறதாம். இப்போது அங்கே தனுஷ் டப்பிங் பேச தொடங்கியிருக்கிறார்.

இராமானுஜம்

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

திங்கள் 31 ஜன 2022