முதல் நாளிலேயே சர்ச்சையை கிளப்பிய பிக்பாஸ் அல்டிமேட்!

entertainment

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஓடிடி வடிவமான பிக்பாஸ் அல்டிமேட் தற்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் 24*7 என தனது ஒளிபரப்பை தொடங்கி இருக்கிறது. இதில் நேற்று போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். வனிதா, ஜூலி, சுரேஷ் சக்ரவர்த்தி, சிநேகன், ஷாரிக், பாலாஜி, தாடி பாலாஜி, தாமரை செல்வி, நிரூப், அபிநய், அபிராமி, சுருதி, அனிதா, சுஜா வருணி என 15 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்திருக்கிறார்கள். இதில் அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட ஓவியா, பரணி ஆகியோர் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் சீசன் 5 வீட்டில் நுழைவு வாயிலில் நட்சத்திர வடிவம், சிவப்பு- கோல்டன் கலர் தீம், டெலிபோன் பூத் என அல்டிமேட்டிற்கு, பிக்பாஸ் வீட்டில் ஆங்காங்கே மட்டும் சில மாற்றங்களை செய்திருக்கிறார்கள். அதேபோல ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் தேன், கீரை, உப்பு, நெய் என இயற்கை பொருட்களை கொடுத்தனுப்பிய கமல்ஹாசன் அதன் சிறப்பை போட்டியாளர்களின் தன்மைக்கு ஏற்றாற் போல சேர்த்து சொன்னார்.

24 மணி நேர ஒளிபரப்பாக இருந்தாலும் அதை பார்க்க விரும்பாதவர்கள் அல்லது நேரம் கிடைக்காதவர்களுக்கு வழக்கம்போல எடிட் செய்யப்பட்ட ஒரு மணி நேர எபிசோட் தினமும் இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகும் எனவும் அறிவிக்கப்பட்டது.

24*7 என ஒளிபரப்பாக இருப்பதால் தணிக்கை இல்லாத காட்சிகள் முதல் நாளிலேயே ஒளிபரப்பாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி அபிநய், நிரூப், அபிராமி ஆகியோர் புகைப்பிடிக்கும் காட்சிகள் ஒளிபரப்பாகி உள்ளது. பிக்பாஸ் அல்டிமேட்டின் முதல் வாரத்தின் தலைவராக ஷாரிக் தேர்வாகி உள்ளார். அது போலவே, வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரம் நாமினேஷன் இருக்காது. ஆனால், பிக்பாஸ் அல்டிமேட்டில் முதல் நாளிலேயே நாமினேஷன் தொடங்கி இருக்க இதில் வனிதா, அனிதா, ஜூலி ஆகியோரது பெயர்கள் இருக்கும்படியான புரோமோவும் தற்போது வெளியாகி இருக்கிறது.

இன்னும் என்னென்ன பரபரப்புகள் காத்திருக்கின்றன என்பதை இனிவரும் நாட்களில் பார்க்கலாம்.

**ஆதிரா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *