மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 30 ஜன 2022

வலிமை ரிலீஸ் எப்போது?

வலிமை ரிலீஸ் எப்போது?

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து செய்திகளை பின்னுக்குத் தள்ளி வலிமை படத்தின் வெளியீட்டு தேதி ஊடகங்களில் வெளிவரத் தொடங்கியிருக்கிறது.

ஜனவரி 26 அன்று வந்திருக்கவேண்டிய ‘ வீரமே வாகை சூடும்’ படம் பிப்ரவரி 4 அன்று வெளியாக உள்ளது. அன்றையதினம் வெளியாகும் என பல மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட ‘எதற்கும் துணிந்தவன்; அரசியல் காரணங்களால் எப்போது வரும் என்பதே தெரியாத நிலை நீடிக்கிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் வலிமை படத்தை வெளியிட விநியோகஸ்தர்கள் தரப்பில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்குமார் நடிப்பில், எச்.வினோத் இயக்கியுள்ள படம் வலிமை போனிகபூர்

ஜீ தமிழ் தொலைக்காட்சி இணைந்துத யாரித்துள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது.

ஆனால், நாடு முழுவதும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்ததை அடுத்து, தமிழகத்தில் திரையரங்குகளுக்கு 50 சதவீத இருக்கையுடன் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், இரவுநேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களுக்காக பட வெளியீட்டை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், தமிழக அரசு இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை ரத்து செய்தது. இதனையடுத்து வலிமை படத்தை பிப்ரவரி 24ஆம் தேதி வெளியீட்டுக்கான அறிவிப்பு பிப்ரவரி 4க்கு பின் வெளிவரும் என்று தியேட்டர் வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

-இராமானுஜம்

தியேட்டர் பாணியில் ஓடிடி!

5 நிமிட வாசிப்பு

தியேட்டர் பாணியில் ஓடிடி!

ரஜினி பட ஹீரோயின்கள்: சர்ச்சையான ஆர்.ஜே.பாலாஜியின் பேச்சு!

3 நிமிட வாசிப்பு

ரஜினி பட ஹீரோயின்கள்: சர்ச்சையான  ஆர்.ஜே.பாலாஜியின் பேச்சு!

பாலியல் குற்றச்சாட்டு: நடிகர் தலைமறைவு!

3 நிமிட வாசிப்பு

பாலியல் குற்றச்சாட்டு: நடிகர் தலைமறைவு!

ஞாயிறு 30 ஜன 2022