மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 30 ஜன 2022

அம்மா பிறந்தநாளுக்கு சிரஞ்சீவியின் உருக்கமான வாழ்த்து!

அம்மா பிறந்தநாளுக்கு சிரஞ்சீவியின் உருக்கமான வாழ்த்து!

தனது தாயின் பிறந்தநாளுக்கு நடிகர் சிரஞ்சீவி தெரிவித்த வாழ்த்து, சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களால் நெகிழ்ச்சியுடன் பகிரப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் தனது தாயின் பிறந்தநாளையொட்டி, வாழ்த்தையும், புகைப்படம் ஒன்றையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு 'குவாரன்டைனில் இருப்பதால் உங்களை மிஸ் செய்கிறேன் அம்மா' என உருக்கமாக தெரிவித்துள்ளார். மேலும், தனது மனைவி மற்றும் தாயுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக பதிவிட்டுள்ள சிரஞ்சீவி, “பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா. நான் குவாரன்டைனில் இருப்பதால் உங்களிடம் நேரடியாக என்னால் ஆசீர்வாதம் வாங்க முடியவில்லை. அதனால் என்னுடைய வாழ்த்துகளை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். எனது இந்த பிறவியில் மட்டுமல்லாமல், அடுத்த பிறவியிலும் உங்கள் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் என நான் இறைவனிடம் கேட்டுக்கொள்கிறேன். அன்புடன் உங்கள் சங்கர் பாபு” எனப் பதிவிட்டுள்ளார்.

ஒவ்வொரு வருடமும், சகோதரர் பவன் கல்யாண், நாக பாபு உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பமும் சிரஞ்சீவி அம்மாவின் பிறந்தநாளைக் கொண்டாடுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு சிரஞ்சீவி கொரோனா தொற்று காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், கொண்டாட்டங்கள் இல்லை என்கிறது சிரஞ்சீவி வட்டாரம்.

- இராமானுஜம்

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

5 நிமிட வாசிப்பு

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

3 நிமிட வாசிப்பு

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

ஞாயிறு 30 ஜன 2022