மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 28 ஜன 2022

தேர்தல் அறிவிப்பில் ஆளுங்கட்சி தலையீடு: விஜயகாந்த்

தேர்தல் அறிவிப்பில் ஆளுங்கட்சி தலையீடு: விஜயகாந்த்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும்கட்சியின் தலையீடு இருப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். அதோடு வேட்புமனு தாக்கல் செய்ய போதிய கால அவகாசம் வழங்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு இன்று முதல் பிப்ரவரி 4ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இன்னும் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில், கடந்த ஜனவரி 26ஆம் தேதி இந்த அறிவிப்பை வெளியிட்டது. இதன்மூலம் நடுவில் ஒருநாள் மட்டுமே இடைவெளி இருந்தது.

இதுதொடர்பாக கேள்வி எழுப்பியுள்ள விஜயகாந்த், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஜனவரி 26ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இடையில் ஒரு நாள் மட்டுமே கால அவகாசம் வழங்கி, ஜனவரி 28ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவித்திருப்பது எந்த விதத்தில் நியாயம். மாநில தேர்தல் அதிகாரிகளால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும்,

எவ்வித கால அவகாசமும் வழங்காமல், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான தேதி உடனடியாக அறிவிக்கப்பட்டது ஏன்? இதிலிருந்து ஆளும் கட்சியின் அரசியல் தலையீடு இருக்கலாம் என தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. தேர்தல் தேதி அறிவிப்பிலேயே இதுபோன்ற அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுவதிலிருந்து, தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும்.

இதுவரை நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வழங்கிய கால அவகாசத்தைப் போல் இந்த தேர்தலிலும், வழங்கினால்தான், அனைத்து வேட்பாளர்களும் தங்களைத் தயார் செய்து கொள்ள ஏதுவாக அமையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

-பிரியா

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

வெள்ளி 28 ஜன 2022