மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 27 ஜன 2022

தி வாரியர் டப்பிங் உரிமை எத்தனை கோடிக்கு விற்பனை?

தி வாரியர் டப்பிங் உரிமை எத்தனை கோடிக்கு விற்பனை?

பாகுபலி, கேஜிஎஃப், புஷ்பா ஆகிய தென்னிந்திய மொழி படங்கள், இந்தி பேசும் மக்கள் அதிகம் இருக்கும் வட இந்திய மாநிலங்களில் வரவேற்பையும், அதிகபட்ச வசூலையும் பெற்று வருகிறது.

இதன் காரணமாக தென்னிந்திய மொழிகளில் மட்டும் சூப்பர் நடிகர்களாக இருந்தவர்கள் அகில இந்திய நடிகர்களாக மாற்றம் கண்டு வருகின்றனர். தமிழில் வெற்றிகரமான இயக்குநராக வலம்வந்த லிங்குசாமி தெலுங்கு - தமிழ் என இரு மொழிகளில் தி வாரியர் படத்தை இயக்கி வருகிறார். தற்போது தி வாரியர் படத்தின் இந்தி மொழி மாற்று மற்றும் தொலைக்காட்சி உரிமை ரூ.16 கோடிக்கு வியாபாரமாகியுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் ‘தி வாரியர்’ திரைப்படம் தென்னிந்திய சினிமாவில் பலவிதமான காரணங்களுக்காக மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது. ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனர் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீநிவாசா சித்தூரி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நடிகரான ராம் பொத்தினேனி இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். மேலும் ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாகவும், அக்ஷ்ரா கவுடா ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும், ஆதிபினி செட்டி வில்லனாகவும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பவன் குமார் இந்தப் படத்தை வெளியிட உள்ளார். இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படம், நாயகன் ராம் பொத்தினேனிக்கு தமிழ் சினிமாவில் சிறப்பான அறிமுகத்தை ஏற்படுத்துவதாக அமையும் என்று படக்குழுவினர் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இந்தப் படத்தின் முதல் பார்வை மற்றும் டைட்டிலை சமீபத்தில் தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர். தற்போது, இந்தப் படத்தின் இந்தி டப்பிங் உரிமை ரூ.16 கோடிக்கு விற்றுள்ளது என்கிற தகவல் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இது படத்தின் நாயகனான ராம் பொத்தினேனியின் திரை வாழ்க்கையில் உச்சமான சாதனையாகும்.

இயக்குநர் லிங்குசாமி ஆக்‌ஷன் என்டர்டெயினர் படங்களுக்காக பெயர் பெற்றவர் என்பதாலும், நடிகர் ராம் சிறந்த படங்களைக் கொடுப்பதில் அர்ப்பணிப்புடன் இருப்பவர் என்பதாலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

சீடிமார் படத்தின் பிரமாண்டமான வெற்றியை தொடர்ந்து ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த ‘தி வாரியர்’ படமும் மிகப் பெரிய ஹிட்டாகும் என நம்பப்படுகிறது.

-இராமானுஜம்

சிம்பு தான் வேணும்: ஸ்ரீநிதி

4 நிமிட வாசிப்பு

சிம்பு தான் வேணும்: ஸ்ரீநிதி

இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்?

3 நிமிட வாசிப்பு

இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்?

மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கும் நிலை!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கும் நிலை!

வியாழன் 27 ஜன 2022