மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 27 ஜன 2022

மீண்டும் நெகட்டிவ் கமெண்ட்டில் சிக்கிய பிக்பாஸ் அர்ச்சனா

மீண்டும் நெகட்டிவ் கமெண்ட்டில் சிக்கிய பிக்பாஸ் அர்ச்சனா

நிகழ்ச்சி தொகுப்பாளரும் நடிகையுமான அர்ச்சனாவும் அவரது மகள் சாராவும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் தங்கள் மீதான நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளனர்.

முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் அர்ச்சனாவும் அவரது மகளும் இணைந்து ’தாயில்லாமல் நானில்லை’ என்ற அம்மா தொடர்பான நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கவுள்ளனர். அந்த நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோ ஒன்று அந்த தொலைக்காட்சி சேனலின் சமூக வலைதள பக்கங்களில் தற்போது வெளியாகியுள்ளது. அந்த புரோமோவுக்கு கீழே பலரும் அர்ச்சனாவையும் அவரது மகள் சாராவையும் ட்ரோல் செய்து நிறைய நெகட்டிவ்வான கமெண்ட்டுகளை கொடுத்து வருகின்றனர். இது தொடர்பாக தற்போது சாராவும், அர்ச்சனாவும் அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளனர்.

அதில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது, “எங்களை வெறுப்பவர்களுக்கான பதிலாக இதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறோம். சமீபத்தில் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் நானும் என் அம்மாவும் இணைந்து தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியின் புரோமோ வெளியானது. ஏன் என்று காரணம் தெரியாமலேயே அதற்கு நிறைய வெறுப்புகள் வெளிப்படுத்தும் வகையிலான கமெண்ட்டுகள் நிறைய பேர் பதிவு செய்திருந்தீர்கள். இதில் முக்கியமானது நிறைய பெண்களே எங்களை அநாகரிகமான மொழியில் பேசியிருந்தீர்கள். அதிலும் குறிப்பாக இரண்டு அழகான குழந்தைகளுக்கு அம்மாவே எங்கள் மீது அப்படி ஒரு கமெண்ட்டை கொடுத்திருந்ததும் எனக்கும் நியாபகம் இருக்கிறது. எங்களுக்கு அன்பு மட்டுமே முக்கியம். எங்களை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி விடுங்கள். எங்களுக்கு ஆதரவு தந்த அனைவருக்குமே நன்றி. அன்புடன், சாரா” என அந்த கடிதத்தில் அர்ச்சனா மகள் தெரிவித்து இருக்கிறார்.

சாராவின் இந்த கமெண்ட்டுக்கு நிறைய பேர் பாசிட்டிவான கமெண்ட்டுகளை தற்போது பதிவிட்டு வருகின்றனர்.

ஆதிரா

வாழ்க்கை ஒரு கனவுதானே: ஏ.ஆர்.ரஹ்மான்

2 நிமிட வாசிப்பு

வாழ்க்கை ஒரு கனவுதானே: ஏ.ஆர்.ரஹ்மான்

சாய் பல்லவி படத்தை வெளியிடும் சூர்யா ஜோதிகா

2 நிமிட வாசிப்பு

சாய் பல்லவி படத்தை வெளியிடும் சூர்யா ஜோதிகா

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

3 நிமிட வாசிப்பு

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

வியாழன் 27 ஜன 2022