மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 27 ஜன 2022

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

அனைத்து வார்டுகளையும் நம்ம கட்சி தான் கைப்பத்தும்னு தலைவர் சொல்றாரே... கொரோனா வார்டுகளையும் சேர்த்து தான் சொல்றாரானு பிரஸ் மீட் பாத்துக்கிட்டே ஃப்ரண்டு ஒருத்தரு பேஸ்புக் ஸ்டேடஸ் போடுறாரு...

நீங்க அப்டேட் பாருங்க

Govindaraj

உள்ளாட்சி தேர்தலை ஒரு மாதம் தள்ளி வைச்சிருக்கலாம் - டிடிவி.தினகரன்.

ஏன் 20 ரூபாய் டோக்கன் பிரிண்ட் போட நேரம் வேண்டுமா

amudu

ஆறுமுகசாமி ஆணைய பதவிக் காலம் 12 வது முறையாக நீட்டிப்பு.

ஆணையத்தை இத்தனை முறை ஏன் நீட்டிக்கிறாங்க என்பதை விசாரிக்க ஒரு ஆணையம் அமைக்கணும் போல.

Dr. M. A. N. Loganathan

O2 தான் வேணும்ன்னு அடம் புடிச்ச டெல்ட்டா எங்க…

டோலோவே போதும்ன்னு அமைதியா இருக்கிற ஒமிக்ரான் எங்க…

சரவணன். 𝓜

பிப். 1ம் தேதி காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல்!

அதெல்லாம் வேணாம்.. எதை எல்லாம் விற்கப் போறாங்கன்னு மட்டும் சொல்லுங்க

நாகராஜசோழன்.MA.MLA.

"நயினார் நாகேந்திரன், வேறு ஏதோ பேசவந்து மாற்றி பேசிவிட்டார்"; - அண்ணாமலை,

தட் ...

மாப்ளை அவர் தானாம், ஆன அவர் போட்டிருக்கிர சட்டை அவரோடது இல்லையாம் மூவ்மென்ட்டு....

balebalu

Complaint கொடுத்தா எடுக்காது கஸ்டமர் கேர் ரெஸ்பான்ஸ் இருக்காது ஆனா

ரீசார்ஜ் க்கு பணம் கட்டணும் ன்னா மட்டும் site உடனடியா வேலை செய்யும் Grinning face

-ஏர்டெல்அட்ராசிட்டிகள்

மயக்குநன்

2047-க்குள் புதிய இந்தியா பிறக்கும்!- பிரதமர் மோடி.

தேதி தள்ளிக்கிட்டே போறதால... 'டெலிவரி'யில சிக்கல் ஏதும் வந்திடாதே..?!

கோழியின் கிறுக்கல்

உடம்புக்குள்ள இருக்கிற வைரஸ், சந்திரமுகி மாதிரி அப்பப்ப வந்து ஆட்டம் காட்டிட்டு போகுது!!

மயக்குநன்

மின் தடை இல்லாத தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை!- அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி.

அதுக்கு அணில்கள்கிட்ட '(மின்)தடையில்லாச் சான்றிதழ்' வாங்கணுமே வாத்தியாரே..?!

-லாக் ஆஃப்

சிம்பு தான் வேணும்: ஸ்ரீநிதி

4 நிமிட வாசிப்பு

சிம்பு தான் வேணும்: ஸ்ரீநிதி

இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்?

3 நிமிட வாசிப்பு

இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்?

மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கும் நிலை!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கும் நிலை!

வியாழன் 27 ஜன 2022