யானை வியாபாரம் தொடங்கியது!


ஹரி இயக்கத்தில் தற்போது தயாராகியுள்ள படம் யானை. இதில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், சமுத்திரகனி, அம்மு அபிராமி, ராதிகா சரத்குமார், யோகி பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். டிரம் ஸ்டிக் நிறுனத்தின் சார்பில் எஸ்.சக்திவேல் தயாரிக்கிறார். மதுரை, பழனி, ராமநாதபுரம் பகுதிகளில் நடந்த, இதன் படப்பிடிப்புகள் சமீபத்தில் நிறைவடைந்தது.சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகும் அன்று போட்டியாக யானை படத்தை வெளியிட இயக்குனர் ஹரி திட்டமிட்டிருந்தார்.
தற்போது எதற்கும் துணிந்தவன் எப்போது ரீலீஸ் என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை. இந்த நிலையில் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ஜீ தமிழ் நிறுவனம் வாங்கி உள்ளது. படம் தியேட்டரில் வெளியான பிறகு ஜீ5 ஓடிடி தளத்திலும் ஜீ தமிழ் மற்றும் ஜீ திரை சேனல்களிலும் ஒளிபரப்பாகிறது.
இராமானுஜம்