மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 ஜன 2022

'ஊ சொல்றியா' : மீண்டும் ஒற்றை பாடலுக்கு நடனமாடும் சமந்தா

'ஊ சொல்றியா' : மீண்டும் ஒற்றை பாடலுக்கு நடனமாடும் சமந்தா

நடிகை சமந்தா டிசம்பர் 17 அன்று வெளியான புஷ்பா படத்தில் 'ஊ சொல்றியா' என்ற பாடலுக்கு நடனமாடினார்.

நாகசைதன்யாவுடன் திருமண உறவை முறித்து கொண்டபின் இந்த பாடலுக்கு அவர் நடனம் ஆடியது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அதேபோன்ற ஐட்டம் பாடலுக்கு நடனமாட சமந்தா தயாராகியுள்ளார். இந்த முறை வேறு ஒரு தெலுங்கு ஹீரோவுடன் அவர் நடனமாட உள்ளார்

புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூனுடன் இணைந்து ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடியது படத்தின் வெற்றிக்கு மிகப்பெரும் பலமாக அமைந்தது. மேலும் பாடலுக்கு தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பும் புரமோஷனுக்கு உதவியது. இந்தப் பாடலுக்கு சமந்தா 5 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றதாக படத்தின் வெற்றிக்குப் பின் கூறப்பட்டது.

இந்த பாடலுக்கு ஓவராக கவர்ச்சி காட்டி ஆடியிருந்தார் சமந்தா.

இதுகுறித்த விமர்சனங்கள் குறித்தெல்லாம் கவலை கொள்ளாமல் அவர் தொடர்ந்து தனது, திரைப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இவரது இந்த ஓற்றைப் பாடலுக்கான ஆட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அடுத்ததாக விஜய் தேவரகொண்டாவுடன் அதேபோன்று நடனமாட தயாராகிவிட்டார் சமந்தா.

அவரது நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் லிகர் படத்தில்தான் சமந்தா நடனமாடவிருக்கிறார் என்கிறது தெலுங்கு திரையுலக வட்டாரம் . புஷ்பா படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு சமந்தாவின் ஆட்டமும் ஒரு காரணமாக அமைந்துள்ள நிலையில், அவரிடம் தொடர்ந்து ஓற்றை பாடலுக்கு நடனமாட தெலுங்கு தயாரிப்பாளர்கள் அணுகி வருகிறார்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்தில் சமந்தா நடனமாடும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் எனவும், இதுவும் புஷ்பா படத்தின் பாடல் போன்றே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

-இராமானுஜம்

உடல்நிலை பற்றிய வதந்தி: ஸ்ருதிஹாசன் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

உடல்நிலை பற்றிய வதந்தி: ஸ்ருதிஹாசன் விளக்கம்!

சந்தானத்தின் ‘குலு குலு’: பெரிய தொகைக்கு வியாபாரம்!

3 நிமிட வாசிப்பு

சந்தானத்தின் ‘குலு குலு’: பெரிய தொகைக்கு வியாபாரம்!

டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து! ...

9 நிமிட வாசிப்பு

டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

செவ்வாய் 25 ஜன 2022