மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 ஜன 2022

வலைதள இயக்குநராகி வரும் கார்த்திக் சுப்புராஜ்

வலைதள இயக்குநராகி வரும் கார்த்திக் சுப்புராஜ்

‘பீட்சா' படம் மூலம் சினிமா ரசிகர்களை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். 2012இல் வெளியான அந்தப் படத்துக்குப் பிறகு 2014இல் அவர் இயக்கிய 'ஜிகர்தண்டா' படமும் பெரிய வரவேற்பைப் பெற்று, இரண்டு தேசிய விருதுகளையும் பெற்றது. அதன்பின் அவர் இயக்கிய 'இறைவி', 'மெர்க்குரி' ஆகிய இரண்டு படங்களும் வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை.

இருந்தபோதும் 2019இல் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தை இயக்கும் வாய்ப்பு கார்த்திக் சுப்பராஜுக்குக் கிடைத்தது. அந்தப் படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையவில்லை. அதன் பின்னர் குறிப்பிடும்படியாக படங்களை சுப்பராஜ் இயக்கவில்லை.

2020ஆம் வருடம் ஓடிடியில் வெளிவந்த 'புத்தம் புது காலை' ஆந்தாலஜி, படத்தில் 'மிராக்கிள்' என்ற ஒரு குறும்படத்தையும், 2021இல் வெளிவந்த மற்றொரு ஆந்தாலஜி படமான 'நவரசா'வில் 'பீஸ்' என்ற குறும்படத்தையும் இயக்கினார். மேலும், முதன்முறையாக தனுஷுடன் இணைந்த 'ஜகமே தந்திரம்' படம் கடந்த வருடம் ஓடிடி தளத்தில் வெளியாகி கடும் விமர்சனங்களைச் சந்தித்தது. அடுத்து விக்ரம், அவரது மகன் துருவ் ஆகியோர் நடிக்கும் 'மகான்' படத்தை இயக்க ஆரம்பித்தார் கார்த்திக். குறுகிய காலத்தில் அந்தப் படம் எடுத்து முடிக்கப்பட்டது. ஆனால், இந்தப் படமும் அடுத்த மாதம் பிப்ரவரி 10ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போகிற போக்கைப் பார்த்தால் சின்னத்திரை இயக்குநர்கள், திரைப்பட இயக்குநர்கள் என இருப்பதை போன்று ஓடிடி பட இயக்குநர்கள் என்பதற்கு கார்த்திக் சுப்பராஜ் தலைமை தாங்குவாரோ என இப்போதே கோடம்பாக்க சினிமாவில் விவாதம் தொடங்கியிருக்கிறது.

உடல்நிலை பற்றிய வதந்தி: ஸ்ருதிஹாசன் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

உடல்நிலை பற்றிய வதந்தி: ஸ்ருதிஹாசன் விளக்கம்!

சந்தானத்தின் ‘குலு குலு’: பெரிய தொகைக்கு வியாபாரம்!

3 நிமிட வாசிப்பு

சந்தானத்தின் ‘குலு குலு’: பெரிய தொகைக்கு வியாபாரம்!

டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து! ...

9 நிமிட வாசிப்பு

டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

செவ்வாய் 25 ஜன 2022