மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 ஜன 2022

விஜய் ஆண்டனி நடிக்கும் ரத்தம்!

விஜய் ஆண்டனி நடிக்கும் ரத்தம்!

நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய திரைப்படத்தைத் தமிழ்ப் படத்தை இயக்கிய இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்குகிறார்.

Infiniti Film Ventures நிறுவனத்தின் சார்பில் கமல் போரா, லலிதா தனஞ்செயன், பி.பிரதீப், பங்கஜ் போரா மற்றும் எஸ்.விக்ரம் குமார் ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.

‘ரத்தம்’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பங்கேற்றிருப்பது படத்துக்கு பெரும் மதிப்பை தந்துள்ளது. தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகைகளான மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் இந்தப் படத்தில் நாயகிகளாக நடிக்கவுள்ளனர். நடிகர் ஜெகன் கிருஷ்ணா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நடிகர் விஜய் ஆண்டனி இதே தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, தற்போது ‘கொலை’ மற்றும் ‘மழை பிடிக்காத மனிதன்’ என்ற மேலும் இரண்டு படங்களிலும் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2022 கோடைக்கால வெளியீடாக இந்தப் படம் வெளியாகவுள்ளது.

இராமானுஜம்

உடல்நிலை பற்றிய வதந்தி: ஸ்ருதிஹாசன் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

உடல்நிலை பற்றிய வதந்தி: ஸ்ருதிஹாசன் விளக்கம்!

சந்தானத்தின் ‘குலு குலு’: பெரிய தொகைக்கு வியாபாரம்!

3 நிமிட வாசிப்பு

சந்தானத்தின் ‘குலு குலு’: பெரிய தொகைக்கு வியாபாரம்!

டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து! ...

9 நிமிட வாசிப்பு

டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

செவ்வாய் 25 ஜன 2022