மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 22 ஜன 2022

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' ரிலீஸ் எப்போது?

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு'  ரிலீஸ் எப்போது?

நடிகர் சிலம்பரசன் தற்போது நடித்து கொண்டிருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் எப்போது வெளியாகும் என அந்த படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.

'மாநாடு' பட வெற்றிக்குப் பிறகு கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடந்து வரும் நிலையில் இந்த படம் இந்த வருடம் கோடை விடுமுறையை ஒட்டி அதாவது ஏப்ரல் 14 அன்று வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது என்று அந்த படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் சிம்பு ஐந்து விதமான கெட்டப்புகளில் வருவதாகவும் இன்னும் ஒரு மாத படப்பிடிப்பு மீதம் இருக்கும் நிலையில் அடுத்த வாரம் முதல் மும்பையில் படப்பிடிப்பு நடக்கும் என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஐசரி கணேஷின் வேல்ஸ் பல்கலைக்கழகம் நடிகர் சிம்புவுக்கு 'கெளரவ டாக்டர்' பட்டம் வழங்கி கவுரவ படுத்தியது. இது தொடர்பாக அவர் கூறியபோது "எங்களது தயாரிப்பில் சிம்பு நடிக்கிறார் என்பதற்காக அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கவில்லை. இதற்கான பரீசலனையில் நிறைய பேர் இருந்தார்கள். அவர்களில் இருந்து ஒருவர் எனும்போது அதற்கு சிம்புவே பொருத்தமானவராக இருந்தார்" என்று தெரிவித்துள்ளார்.

ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனம் சிம்பு நடிக்கும் 'வெந்து தணிந்தது காடு' மற்றும் 'கொரோனா குமார்' ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. இந்த இரண்டு படங்களுமே இந்த வருடத்தில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதிரா

சிம்பு தான் வேணும்: ஸ்ரீநிதி

4 நிமிட வாசிப்பு

சிம்பு தான் வேணும்: ஸ்ரீநிதி

இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்?

3 நிமிட வாசிப்பு

இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்?

மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கும் நிலை!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கும் நிலை!

சனி 22 ஜன 2022