மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 22 ஜன 2022

அல்லு அர்ஜுன்: இந்தி டப்பிங் படம் ரிலீஸாகாது!

அல்லு அர்ஜுன்: இந்தி டப்பிங் படம் ரிலீஸாகாது!

தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த அல்லு அர்ஜுன், புஷ்பா வெளியீட்டிற்குப் பிறகு அகில இந்திய நடிகராக மாறியுள்ளார். அவர் நடித்த பழையதெலுங்குப் படங்களை இந்தியில் டப்பிங் செய்ய தெலுங்கு சினிமா துறை திட்டமிட்டுள்ளது. அவை யூடியூபில் அதிகப் பார்வையாளர்களையும், விருப்பங்களைபெற்ற படங்களாகும்.

இப்போது 'புஷ்பா' படம் மூலம் அவருக்கு இந்தி வியாபார வட்டாரத்தில் முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அல்லு அர்ஜுனின் பல படங்களை இந்தியில் மொழிமாற்றம் செய்து யூடியூபில் வெளியிட்ட கோல்ட்மைன்ஸ் டெலிபிலிம்ஸ் நிறுவனம், அல்லு அர்ஜுன் நடித்த 'அலா வைகுந்தபுரம்லோ' படத்தை இந்தியில் மொழிமாற்றம் செய்து ஜனவரி 26ம் தேதி தியேட்டர்களில் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது.

இப்படம் இந்தியில் வெளியானால் தங்கள் படத்தின் வணிகம் பாதிக்கும் என்று கார்த்திக் ஆர்யனின் ’ஷெஸாடா’ படக்குழுவினர் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

ஏனென்றால், ‘அலா வைகுந்தபுரம்லோ’ படம் இந்தியில் ‘ஷெஸாடா’வாக ஆர்யன் கான் - கீர்த்தி சனோன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. ரோகித் தவான் இயக்கி வருகிறார். இந்த நிலையில், ’ஷெஸாடா’ படக்குழுவினரின் அதிருப்தியைத் தொடர்ந்து இந்தி வெளியீட்டைக் கைவிட்டுள்ளார் தயாரிப்பாளர் மணிஷ் கிரிஷ் ஷா. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை கோல்ட்மைன்ஸ் வெளியிட்டுள்ளது.

-இராமானுஜம்

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

சனி 22 ஜன 2022