எடப்பாடியை வென்ற பொன்முடி: அப்டேட் குமாரு

ஏதோ மாணவ சமுதாயத்துக்கே மாபெரும் தலைவர் மாதிரி அரியர் கொன்றான், ஆன் லைன் கொண்டான் அப்படினு பட்டமெல்லாம் எடப்பாடிக்கு முதல் கொரோனா பேட்ச் மாணவர்கள் கொடுத்தாங்க. இப்ப எடப்பாடியை ஓவர் டேக் பண்ணி பொன்முடி கல்லூரி செமஸ்டர் தேர்வெல்லாம் ஆன்லைன்லதான்னு சொல்லிட்டாரு. அதனால எடப்பாடிக்கு கொடுத்த பட்டத்தையெல்லாம் வாங்கி பொன்முடிக்கு கொடுத்துடறோம். கூடவே எடப்பாடியை வென்ற பொன்முடினு இன்னொரு பட்டத்தையும் தர்றோம். அதுசரி...ஆன் லைன் தேர்வுனு போட்டு புக்கை பாத்து எழுதற மாதிரி ஒரு டிவியில காட்டுறாங்களே... அது பொய்தானே....
நீங்க அப்டேட் பாருங்க
amudu
டாஸ்மாக் பார் ஏலத்தின் மூலம் ₹12 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். -அமைச்சர செந்தில் பாலாஜி.
என்ன பெரிய ₹12 கோடி கூடுதல் வருவாய். பண்டிகை காலத்தில் டாஸ்மாக் கூடுதல் விற்பனை தெரியுமா?
amudu
முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீடு உட்பட 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை.
கொரோனாவின் அலைகள் ஓய்ந்தாலும், இந்த ரெய்டுகளின் அலைகள் ஓயாது போலவே.
மயக்குநன்
தமிழர்களுடைய உரிமையை பாஜக அரசு 'விட்டுக்' கொடுக்காது!- அண்ணாமலை.
'முட்டுக்' கொடுக்கிறதுல உங்களை மிஞ்ச முடியுமா..?!
நாகராஜசோழன்.MA.MLA
exam எல்லாம் ஆன்லைன் ல எழுதலாம்னு சந்தோசப்பட்டுட்டு இருக்காங்க,
இது கொரோனா batch சொல்லி நாளைக்கு எவனும் வேலை குடுக்க மாட்டானு போயி சொல்லுங்கடா பசங்க கிட்ட...
மயக்குநன்
பொங்கல் தினத்தன்று டாஸ்மாக் கடைகளில் ரூ.317 கோடிக்கு மது விற்பனை!- செய்தி.
எத்தனை அலைகள் வந்தாலும் இந்த 'சுனாமி'யை ஒண்ணும் செய்ய முடியாது போல..?!
Mannar & company
குடியரசு தின விழாவில் ஜீ க்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருக்குன்னு சொல்லிருப்பாளே..
ஆமா எப்படி தெரியும்
போன குடியரசு தினத்துக்கும் சொன்னாங்களே.
balebalu
விண்வெளியில் ஒலிக்கவுள்ள இளையராஜா இசை - செய்தி
வான் மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள்
கோழியின் கிறுக்கல்
எவருடனும் உங்களை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்!!
மேல் இருப்பவரைப் பார்த்து மன அழுத்தமும், கீழ் இருப்பவரை பார்த்து தலைக்கனமும் வந்துவிட நிறைய வாய்ப்பிருக்கிறது!
ச ப் பா ணி
இணைய வழி இலக்கிய கூட்டத்தில்
ஆகப்பெரிய சவுகரியம் என்னவென்றால் சுதந்திரமாய் கொட்டாய் விட அனுமதிப்பதே.
மயக்குநன்
புதிதாகச் சாலை போடும்போது 'மில்லிங்' அவசியம்!- முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.
சும்மா பேருக்கு 'ஃபில்லிங்' பண்ணக் கூடாதுனு சொல்றாரு போல..?!
கோழியின் கிறுக்கல்!!
கடைசி பந்தியில் பிரியாணில Piece கிடைக்கும்னு எதிர்பார்க்கிறதும்,
கல்யாணத்துக்கு பிறகு மனைவி கிட்ட Peace கிடைக்கும்னு எதிர்பார்க்கிறதும் ஒன்று தான்!!!
-லாக் ஆஃப்