மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 21 ஜன 2022

விழிப்புணர்வு: தீபிகாவின் ட்ரெய்லரை பயன்படுத்திய மாநகராட்சி!

விழிப்புணர்வு: தீபிகாவின் ட்ரெய்லரை பயன்படுத்திய மாநகராட்சி!

கபூர் மற்றும் சன்ஸ் படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குனர் ஷகுன் பத்ரா, தீபிகா படுகோன், சித்தாந்த் சதுர்வேதி அனன்யா பாண்டே ஆகியோர் நடிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள படம் 'கெஹ்ரையன்'.

படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இதில் 38 வயது மதிக்கத்தக்க தீபிகா படுகோன் 28 வயது இளைஞருடன் சிக்கலான நவீன உறவுகள் பற்றி பேசும் படமாக உருவாகியுள்ளது.

சிக்கலான நவீன உறவுகள் பற்றி பேசும், முக்கோண காதல் கதையாகவும் இருப்பதால் ரசிகர்கள் நிச்சயம் இப்படத்தை ஆதரிப்பார்கள் என்று தீபிகா படுகோன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், படத்தின் ட்ரெய்லரில் இடம்பெறும் குப்பைத் தொட்டி காட்சியை மும்பை மாநகராட்சி குப்பை கழிவுகளை பொறுப்பாக எப்படி கையாளவேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

2.42 நிமிடங்கள் கொண்டுள்ள இந்த படத்தின் ட்ரெய்லரில் தீபிகா படுகோனே குப்பையை குப்பைத்தொட்டியில் போடுமாறு சொல்வார். ஆனால் அதை நாயகன் மும்பையில் பாதி பேர் இப்படித்தான் என சொல்லி செய்ய மறுக்க தீபிகாவே அதனை குப்பைத்தொட்டியில் சேர்ப்பார். அந்த காட்சியை கட் செய்து அப்படியே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது மும்பை மாநகராட்சி.

குப்பைகளை சரியான இடத்தில் சேர்க்குமாறு சொல்லி அது தொடர்பான வாசகத்தையும் பதிவு செய்துள்ளது.

-இராமானுஜம்

உடல்நிலை பற்றிய வதந்தி: ஸ்ருதிஹாசன் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

உடல்நிலை பற்றிய வதந்தி: ஸ்ருதிஹாசன் விளக்கம்!

சந்தானத்தின் ‘குலு குலு’: பெரிய தொகைக்கு வியாபாரம்!

3 நிமிட வாசிப்பு

சந்தானத்தின் ‘குலு குலு’: பெரிய தொகைக்கு வியாபாரம்!

டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து! ...

9 நிமிட வாசிப்பு

டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

வெள்ளி 21 ஜன 2022