மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 21 ஜன 2022

பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து ஓவியா விலகலா?

பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து ஓவியா விலகலா?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஓவியா கலந்து கொள்வார் என தகவல் வெளியான நிலையில் தற்போது அது கேள்விக் குறியாகியுள்ளது.

பிக்பாஸ் ஓடிடி வடிவமாக 'பிக்பாஸ் அல்டிமேட்' நிகழ்ச்சி இந்த மாதம் இறுதியில் இருந்து அதாவது ஜனவரி 30ம் தேதியில் இருந்து தொடங்க இருக்கிறது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் செயலியில் 24*7 ஆக ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியை வழக்கம் போல வார இறுதி நாட்களில் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இதில் கலந்து கொள்வதற்கான போட்டியாளர்களது உத்தேச பட்டியல் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வெளிவந்துள்ளது.

முந்தைய சீசன்களில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்ட நிலையில் முதல் சீசனில் இருந்து சிநேகன், பரணி, ஓவியா, ஜூலி, சுஜா வருணி ஆகியோரும் இரண்டாம் சீசனில் இருந்து பாலாஜி, மூன்றாம் சீசனில் இருந்து அபிராமி, வனிதா, ஷெரினும் நான்காவது சீசனில் இருந்து அனிதா, பாலா, சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோரும் ஐந்தாவது சீசனில் இருந்து தாமரை, நாடியா, சுருதி ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஓவியா கலந்து கொள்வது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. ஓவியாவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதன் காரணமாக அவர் தற்போது ஓய்வில் இருக்கிறார். அதனால் பிக்பாஸ் அல்டிமேட் ஆரம்பித்து சில நாட்கள் கழித்தே ஓவியா கலந்து கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் இன்று மற்ற போட்டியாளர்களோடு பிக்பாஸ் அல்டிமேட்டுக்கான புரோமோ ஷூட் தொடங்க இருக்கிறது.

ஆதிரா

உடல்நிலை பற்றிய வதந்தி: ஸ்ருதிஹாசன் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

உடல்நிலை பற்றிய வதந்தி: ஸ்ருதிஹாசன் விளக்கம்!

சந்தானத்தின் ‘குலு குலு’: பெரிய தொகைக்கு வியாபாரம்!

3 நிமிட வாசிப்பு

சந்தானத்தின் ‘குலு குலு’: பெரிய தொகைக்கு வியாபாரம்!

டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து! ...

9 நிமிட வாசிப்பு

டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

வெள்ளி 21 ஜன 2022