மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 20 ஜன 2022

மீண்டும் நடிக்க வரும் சண்டக்கோழி!

மீண்டும்  நடிக்க வரும் சண்டக்கோழி!

'ரன்' படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். அதன் பிறகு 'ஆயுத எழுத்து', 'சண்டக்கோழி', 'புதிய கீதை' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்தவர் தற்போது மீண்டும் நடிக்க வருகிறார்.

மேலும், இதுவரையிலும் சமூக வலைதள பக்கங்களில் இல்லாமல் இருந்தவர், தற்போது முதல் முறையாக இன்ஸ்டா பக்கத்தில் இணைந்திருக்கிறார்.

பத்தாண்டுகளாக சினிமாவில் இருந்து விலகியிருந்த இவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் ஜெயராம் உடன் இணைந்து நடிக்கும் 'மகள்' எனும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் போஸ்டரை தனது சமூக வலைத்தள பக்கத்தில் முதல் பதிவாக பகிர்ந்துள்ளார். இப்படத்தை இயக்குநர் சத்தியன் அந்திக்காடு இயக்குகிறார்.

ஜெயராமுடன் ஜூலியட் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் மீரா ஜாஸ்மின் நடித்துவருகிறார்.

நடிகை மீரா ஜாஸ்மின் தனது முதல் இன்ஸ்டாகிராம் பதிவில், வாழ்வின் புதிய தொடக்கத்தில் எல்லோருடனும் நெருக்கமாக இருக்க வேண்டும், ரசிகர்களுடன் இணைந்திருப்பது, நமது வளர்ச்சிக்கு முக்கியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

திரைத்துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மீரா ஜாஸ்மின் சமூக வலைத்தள பக்கத்தை வரவேற்று தங்கள் அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

ஆதிரா

லெஜண்ட் சரவணாவால் குழப்பமான சூர்யா ரசிகர்கள்!

3 நிமிட வாசிப்பு

லெஜண்ட் சரவணாவால் குழப்பமான சூர்யா ரசிகர்கள்!

தெலங்கானா முதல்வரைச் சந்தித்த விஜய்

2 நிமிட வாசிப்பு

தெலங்கானா முதல்வரைச் சந்தித்த விஜய்

இரண்டாவது திருமணம் குறித்து டி.இமான்

4 நிமிட வாசிப்பு

இரண்டாவது திருமணம் குறித்து டி.இமான்

வியாழன் 20 ஜன 2022