மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 19 ஜன 2022

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

சினிமா வியாபாரத்தில் தீபாவளி முதலிடத்திலும், இரண்டாம் இடத்தில் பொங்கல் வசூலும் இருக்கும்.

கொரோனா என்கிற தொற்று பிற தொழில்களை காட்டிலும் சினிமா திரையரங்க தொழிலை கடுமையாக பாதித்து உருக்குலைத்து வருகிறது. அதன் எதிரொலி, இந்தாண்டு பொங்கல் வசூலில் இருந்த வலிமை, ஆர்ஆர்ஆர், ராதேஷ்யாம் படங்கள் வெளியாகாது என தெரிந்தபின் சசிகுமார் நடித்த கொம்புவச்ச சிங்கம்டா, பிரபுதேவா நடிப்பில் தேள், விதார்த் நடித்துள்ள கார்பன், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காமெடி நடிகர் சதீஷ் நாயகனாக நடித்துள்ள நாய் சேகர், குக் வித் கோமாளி அஸ்வின் நடிப்பில் என்ன சொல்லப்போகிறாய் என ஐந்து படங்கள் பொங்கலுக்கு வெளியானது.

நட்சத்திர அந்தஸ்து, பெரிய நிறுவனங்களின் தயாரிப்பு என எல்லா தகுதிகள் இருந்தும் கூட படத்தின் முதல் காட்சிக்கு மூன்று இலக்க டிக்கெட் விற்பனை கூட ஆகவில்லை. தமிழகத்தில் பல ஊர்களில் பார்வையாளர்கள் வராததால் தொடக்க காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் எந்த படமாக இருந்தாலும் இயல்பான கூட்டம் திரையரங்குகளில் கூடும்.

குறைந்தபட்ச வசூல் இருக்கும் படம் நன்றாக இருக்கிறது என்றால் அடுத்த காட்சியில் இருந்தே கல்லா கட்ட தொடங்கிவிடும், அப்படி எதுவும் நடக்கவில்லை. வெளியான படங்களில் கொம்புவச்ச சிங்கம்டா, தேள் என இரண்டு படங்கள் மட்டுமே தமிழகத்தில் மொத்த வசூல் கணக்கில் கோடிகளை கடந்து கெளரவமான வசூல் செய்த படங்களாக உள்ளது. மற்ற மூன்று படங்களும் படம் வெளியீட்டு செலவுக்கான வசூல் தொகையை கூட திரையரங்க வசூல் மூலம் பெறவில்லை என்கின்றனர்.

ஒரு படத்தை தமிழகம் முழுவதும் சுமார் 250 திரையரங்குகளில் வெளியிட சுமார் 1 கோடி ரூபாய் வரை செலவு ஆகிறது(டிஜிட்டல் கட்டணம், போஸ்டர், மற்றும் விளம்பர செலவுகள்) திரையரங்குகளுக்கு மக்களை வரவைக்ககூடிய படங்கள், ரிலீஸ் செய்யப்பட்டும் கூட்டம் வராமல் போனதற்கு கொரோனா மூன்றாவது அலை பயம், அதையும் கடந்து மக்கள் படம் பார்க்க வருவது இரவு காட்சி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே அதிகமாக இருக்கும்.

இரவுக்காட்சி முடிந்து 10 மணிக்குள் வீடு திரும்புவதில் உள்ள சிரமம், காவல்துறை கெடுபிடி, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக மக்கள் புதிய படங்களை பார்க்க ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக பொங்கலுக்கு இயல்பாக கிடைத்திருக்ககூடிய குறைந்தபட்ச வருவாயை தமிழ்சினிமா 2022 தொடக்கத்திலேயே இழந்திருக்கிறது.

அம்பலவாணன்

சிம்பு தான் வேணும்: ஸ்ரீநிதி

4 நிமிட வாசிப்பு

சிம்பு தான் வேணும்: ஸ்ரீநிதி

இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்?

3 நிமிட வாசிப்பு

இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்?

மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கும் நிலை!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கும் நிலை!

புதன் 19 ஜன 2022