மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 19 ஜன 2022

பொங்கல் பண்டிகையில் கலவரம்: சேரன் வருத்தம்!

பொங்கல் பண்டிகையில் கலவரம்:  சேரன் வருத்தம்!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை விழா சிறப்பாக நடைபெற்று முடிந்தது. குறிப்பாக மதுரை மற்றும் சில பகுதிகளில் அரசு உதவியுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடந்தன.

பொங்கல் கொண்டாட்டங்கள் முடிந்து அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்ட நிலையில், தமிழகத்தில் சாதியின் பெயரை சொல்லி பல இடங்களில் அத்துமீறல் சம்பவங்கள் நடந்துள்ளன.

இயக்குநர் சேரனின் சொந்த ஊரான மதுரை மேலூர் அருகேயுள்ள பழையூர்பட்டி கிராமத்தில் பொங்கல் அன்று, ஒரு சிலர் சாதிய அத்துமீறலில் ஈடுபட்டு, அதனால் கலவரம் நடைபெற்றுள்ளது.

அதை சேரன் வருத்தத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இத்தனை வருடங்கள் இல்லாத நிகழ்வு என் கிராமத்தில் நடந்திருப்பது மனதை புண்படுத்துகிறது. அங்கே எல்லோரும் இதுவரை தாய் பிள்ளைகளாக சாதி வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்தவர்கள். அந்த ஒற்றுமை சிதைவதை பெரியவர்கள் தடுக்கவேண்டும். அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியதும், கட்டி வைத்து அடித்ததும் உண்மையெனில் அது கண்டனத்திற்குரியது.

கிராம பெரியவர்கள் மற்றும் காவல் துறையினர் சரியான விசாரணையின் அடிப்படையில் நீதி காணவேண்டும். நம் மண்ணில் இனி இதுபோல் ஒன்று நடக்கக்கூடாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது ஆறுதல்கள். நடந்த விசயங்களை விசாரித்ததில் குற்றம் சுமத்தப்பட்ட அந்த இளைஞன் மற்றும் அவனின் கூட்டாளிகள் மேல் தான் தவறு என்பது ஊர்ஜிதமாகிறது. அவன் கிராமத்திற்குள் போதைப்பொருள் வியாபாரம் செய்திருக்கிறான். இருமுறை காவல்துறை மூலம் எச்சரித்தும் மீண்டும் தொடரவே, அதனால் இளைஞர்கள் கெடக்கூடும் என அச்சமடைந்த மக்கள் அவர்களை போலீசில் ஒப்படைக்க ஏற்பட்ட முயற்சியே திரித்து சொல்லப்பட்டிருக்கிறது.

தவறுகளை மறைத்து அவர்களை அடித்ததை மட்டும் சொல்லி புகாரை திசை திருப்பி இருக்கிறார்கள். இப்போது காவல்துறையும் பெரியவர்களும் தலையிட்டு சரியானதை அறிந்து அதற்கான முடிவு தேடும் முயற்சியில் இருக்கிறார்கள். எப்படியோ எங்கள் மண்ணின் பெயர் காப்பாற்றப்பட வேண்டும். தவறுகள் கலையப்பட்டு, உணர்த்தப்பட்டு,நல்லவர்கள் தண்டிக்கப்படாமல் பகை மேலும் வளராமல் சுமூகமாக மாறினால் போதும். சிறுவர்களை இளைஞர்கள் தவறான வழிக்கு திசை திருப்புவதை தடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

இராமானுஜம்

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

புதன் 19 ஜன 2022