மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 19 ஜன 2022

இந்தியில் ரீமேக் செய்யப்படும் விஜய் அஜித் படங்கள்!

இந்தியில் ரீமேக் செய்யப்படும் விஜய்  அஜித் படங்கள்!

மெர்சல்,விஸ்வாசம் படங்கள் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பிராந்திய மொழிகளில் தொடங்கப்படும் திரைப்படங்கள் பிறமொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெற்றி பெற்று வருகிறது.

அதனால் தற்போது தயாரிக்கப்படும் முன்னணி கதாநாயகர்கள் நடிக்கும் படங்கள் அனைத்தும் இதேபோன்ற நடைமுறையைப் பின்பற்றத் தொடங்கியுள்ளன.

இதன் காரணமாக நடிகர் விஜய்யின் ‘மெர்சல்’ அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ படங்கள் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தியேட்டரில் வெளியாகவுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகி வசூலைக் குவித்ததால், முன்னணி நடிகர்களின் பழைய சூப்பர் ஹிட் படங்களை இந்தியில் டப்பிங் செய்து வெளியிட அதிகமான பிராந்திய மொழி படங்களின் இந்தி உரிமையை வாங்கி வைத்துள்ள தயாரிப்பாளர் மனிஷ் ஷா முடிவு செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

புஷ்பா’ வெற்றியால் இந்தியில் டப்பிங் செய்து வரும் அல்லு அர்ஜுனின் ‘அலா வைகுந்த புரம் லோ’ படத்தினை ஜனவரி 26ஆம் தேதி தியேட்டரில் வெளியிடுகின்றனர். இதனைத்தொடர்ந்து, ராம் சரணின் ‘ரங்க ஸ்தலம்’ வரும் பிப்ரவரி மாதமும், தமிழில் விஜய்யின் ‘மெர்சல்’, அஜித்தின் ‘விஸ்வாசம்’ படங்களை அடுத்தடுத்து டப்பிங் செய்து வெளியிடத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

பாகுபலி’, ‘கேஜிஎஃப்’ படங்களின் வெற்றியால் பான் இந்தியா படங்களில் நடிகர்கள் ஆர்வம் காட்டி நடித்து வருகின்றனர். தமிழில் விஜய் , தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் பான் இந்தியா நடிகர்களாக மாறிவிட்டனர்.

‘விஜய் 66’ படம் பான் இந்தியா படமாக உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-இராமானுஜம்

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

புதன் 19 ஜன 2022