மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 18 ஜன 2022

பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்கள் யார்?

பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்கள் யார்?

உலக அளவில் புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை ஐந்து சீசன்களை கடந்துள்ளது. ஐந்தாவது சீசன் கடந்த ஞாயிற்று கிழமை முடிவடைந்த நிலையில் போட்டியாளர் ராஜூ வெற்றி பெற்றார். இறுதி நிகழ்ச்சியில் நடிகரும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் தொகுப்பாளருமான கமல்ஹாசன் 'பிக்பாஸ் அல்டிமேட்' என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

அதற்கு முன்பே பிக்பாஸ் ஓடிடி என்ற தகவல் வெளி வந்தாலும் கமல்ஹாசன், நடிகர் சிவகார்த்திகேயன் மூலம் பிக்பாஸ் அல்டிமேட் என்ற விஷயத்தை அறிமுகப்படுத்தினார். டிஸ்னி+ ஹாட்ஸ்டார் செயலியில் மட்டும் 24*7 என ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் வழக்கம் போல வார இறுதியில் தொகுத்து வழங்குவார்.

இந்த மாதம் இறுதியில் அதாவது ஜனவரி 30ம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டார் செயலியில் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. போட்டியாளர்கள் முந்தைய சீசனில் பங்கேற்பவர்களே பங்கேற்பார்கள் என்ற தகவலை கமல்ஹாசன் சொல்லியிருந்தாலும் இன்னும் யார் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

ஆனால், பிக்பாஸ் ஓடிடி குறித்து சமீபத்தில் புரோமோ ஒன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் சமூக வலைதளங்களில் வெளியிட்டது. அதில் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டு சுவரை மேலே ஏற்றி கட்ட சொல்கிறார். பின்னணியில் வனிதாவின் சண்டை போடும் குரல் கேட்கிறது. ஏற்கனவே ஓவியா, அனிதா, பாலா என முந்தைய சீசன்களின் போட்டியாளர்கள் பெயர்கள் அடிபடும் நிலையில் புரோமோ மூலம் பரணி, வனிதா ஆகியோரையும் இந்த பிக்பாஸ் அல்டிமேட்டில் எதிர்ப்பார்க்கலாம்.

அதே போல ஐந்தாவது சீசனில் பங்கேற்று குறைந்த நாட்களிலேயே வெளியேறிய போட்டியாளர்களான நாடியா சங்க், சுருதி, நமீதா ஆகியோரிடமும் பிக்பாஸ் அல்டிமேட்டில் பங்கேற்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதிரா

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

செவ்வாய் 18 ஜன 2022