மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 18 ஜன 2022

தமிழ் சினிமாவுக்கு வரும் கே.வி.விஜயேந்திர பிரசாத்

தமிழ் சினிமாவுக்கு வரும் கே.வி.விஜயேந்திர பிரசாத்

தர்மபிரபு, ஆனந்தம் விளையாடும் வீடு படங்களை தொடர்ந்து ஸ்ரீவாரி பிலிம் தயாரிக்கும் மூன்றாவது படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை எழுதுவதற்காக பிரபல திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா கே.வி.விஜயேந்திர பிரசாத் முதல்முறையாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்

பாகுபலி, ரத்தம் ரணம் ரெளத்திரம் படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதியவர் கே.வி.விஜயேந்திரபிரசாத். இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் தந்தை இவர். பிராந்திய மொழிகளில் தயாரிக்கப்படும் படங்கள் சர்வதேச அளவில் ரசிகர்கள் விரும்பி பார்க்கவும், கொண்டாடவும் பிரம்மாண்டம், நட்சத்திரங்கள் இருந்தால் மட்டும் போதாது எல்லாமொழியினருக்கும் பொருந்திப் போகின்ற வலிமையான திரைக்கதை மிக முக்கியம்,

அதனை திறம்பட செய்து பாகுபலி 1,2, படத்தின் வெற்றிக்கும், ஆர்.ஆர்.ஆர் படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்படுவதற்கும் தனது கதை மூலம் அடித்தளம் போட்டுக் கொடுத்தவர் கே.வி.விஜயேந்திர பிரசாத்.

இந்தியில் பஜ்ரங்கி பைஜான், ‘மணிகர்னிகா' படங்களுக்கும் இவர்தான் கதை, திரைக்கதை எழுதினார். தற்போது முதல் முறையாக தமிழ் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதுவதற்காக வி.விஜயேந்திர பிரசாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்திற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் தெரிவித்தார்.

ஸ்ரீவாரி பிலிம் தயாரிக்கும் படத்தில் முன்னணி நடிகர்கள் இடம்பெறுவார்கள் என்றும் நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் நாட்களில் வெளியிடப்படும் என்றும் ரங்கநாதன் கூறினார்.

தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை திரைக்கதை, வசனம் எழுதுவதற்காக அத்துறையில் வெற்றிபெற்றவர்கள், திறமையாளர்களை தமிழ் சினிமா இயக்குநர்கள் அனுமதிப்பதில்லை எல்லாவற்றையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது இங்கு நடைமுறையாக உள்ளது.

இயக்குநர் பாரதிராஜா, ஷங்கர் போன்றவர்கள் கதை, மற்றும் வசனகர்த்தாக்களை தாங்கள் இயக்கும் படங்களுக்கு முழுமையாக பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளார்கள். அந்த வழியில் தற்போது வெற்றிபெற்ற திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா கே.வி.விஜயேந்திர பிரசாத்தை ஸ்ரீவாரி பிலிம் பி.ரங்கநாதன் தமிழ் சினிமாவுக்கு அழைத்து வருவது நல்ல தொடக்கமாக கருதப்படுகிறது.

-அம்பலவாணன்

ட்ரெண்டிங்கில் லீனா மணிமேகலை : என்ன காரணம்?

3 நிமிட வாசிப்பு

ட்ரெண்டிங்கில் லீனா மணிமேகலை : என்ன காரணம்?

சமந்தா போன்று கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி

2 நிமிட வாசிப்பு

சமந்தா போன்று கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி

ஐந்தாவது டெஸ்ட்: 257 ரன்கள் முன்னிலையில் இந்தியா!

4 நிமிட வாசிப்பு

ஐந்தாவது டெஸ்ட்: 257 ரன்கள் முன்னிலையில் இந்தியா!

செவ்வாய் 18 ஜன 2022