மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 18 ஜன 2022

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

தமிழ்த் திரையுலகம் எதிர்பார்க்காத, யோசித்துப் பார்க்க முடியாத தகவல் (17.01.2021) நள்ளிரவில் வெளிவந்திருக்கிறது.

நடிகர் தனுஷ் தானும் தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் கணவன் மனைவி என்கிற உறவிலிருந்து பிரிவதாக அறிவித்துள்ளார். தமிழ்ச் சினிமாவின் தற்போது மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கும் தனுஷ் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யாவை 2004-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

18 ஆண்டுகள் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு யாத்ரா ராஜா மற்றும் லிங்காராஜா என்ற இரு மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் தாங்கள் இருவரும் மனமொத்து பிரிவதாக அறிவித்துள்ளார் தனுஷ்.

இது குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “18 வருடங்கள் நண்பர்கள், தம்பதிகள், பெற்றோர்கள் மற்றும் நலம் விரும்புபவர்கள் என ஒருவரையொருவர் ஒன்றாக இணைத்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது. இன்று நாங்கள் ஒருவரை ஒருவர் பிரியும் இடத்தில் நிற்கிறோம். ஐஸ்வர்யாவும், நானும் பிரிவதாகப் பரஸ்பர முடிவு செய்துள்ளோம். மேலும், இருவரும் எங்களைச் சிறப்பாகப் புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதைச் சமாளிக்கத் தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்கவும்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்தத் தம்பதிகள் பற்றிய எந்தவொரு நெகட்டிவ் செய்தியும் எப்போதும் வெளிவந்திருக்காத நிலையில் இந்தத் திடீர் பிரிவுக்கு என்ன காரணம் என்பதை அவர்கள் இருவர் மட்டுமே பொதுவெளியில் கூற முடியும்.

-இராமானுஜம்

சிம்பு தான் வேணும்: ஸ்ரீநிதி

4 நிமிட வாசிப்பு

சிம்பு தான் வேணும்: ஸ்ரீநிதி

இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்?

3 நிமிட வாசிப்பு

இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்?

மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கும் நிலை!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கும் நிலை!

செவ்வாய் 18 ஜன 2022