மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 18 ஜன 2022

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான 'புஷ்பா' படத்தில் 'ஓ சொல்றியா' பாடலுக்கு நடனமாடியதற்காக சமந்தாவுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தானா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் 'புஷ்பா'. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. படம் வெற்றி அடைந்த அளவிற்கு பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக படம் வெளியாவதற்கு முன்பே தேவிஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் அனைத்துமே படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டின. அதிலும் சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் என்ற செய்தி ரசிகர்களிடையே ஆவலை அதிகப்படுத்தியது.

'ஓ சொல்றியா' என தொடங்கும் அந்த பாடல் வெளியான போது அதன் வரிகளுக்காக சர்ச்சையானது. இந்த பாடலுக்கு முதலில் நடனமாட சமந்தா மறுப்பு தெரிவித்ததாகவும், குறிப்பிட்ட சில நடன அசைவுகளை மறுத்ததாகவும், நிறைய தயக்கம் இருந்ததாகவும் பின்பு அல்லு அர்ஜூன் சமந்தாவிடம் பேசி சமாதானப்படுத்திய பின்பே அவர் ஒப்புக் கொண்டார் எனவும் அல்லு அர்ஜூன் 'புஷ்பா' விழா மேடை ஒன்றில் தெரிவித்து இருந்தார்.

தன்னை நம்பி சமந்தா இந்த பாடலை ஒப்புக்கொண்டதற்கு நன்றி தெரிவித்தார் அல்லு அர்ஜூன். இதற்கு சமந்தா, 'எனக்கு இந்த பாடலுக்கு நடனமாடுவதில் நிறைய தயக்கங்கள் இருந்தது உண்மைதான். அதெல்லாம் தாண்டி அல்லு அர்ஜூன் சொன்ன வார்த்தைக்காக நான் நடனமாடினேன். எப்போதும் இனி உங்களை நம்புவேன்' என சமந்தாவும் இந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்புக்கு பின்பு அல்லு அர்ஜூனுக்கும் படத்தின் இயக்குநர் சுகுமாருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டார்.

படத்தில் மூன்று நிமிடம் மட்டுமே வரக்கூடிய இந்த பாடலுக்காக சமந்தாவுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. முன்பு வெளியான 'தி ஃபேமிலி மேன்' தொடரில் ராஜி என்ற எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்ததற்காக இதுபோன்று 4 கோடி வரை சம்பளம் தரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு தான் வேணும்: ஸ்ரீநிதி

4 நிமிட வாசிப்பு

சிம்பு தான் வேணும்: ஸ்ரீநிதி

இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்?

3 நிமிட வாசிப்பு

இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்?

மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கும் நிலை!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கும் நிலை!

செவ்வாய் 18 ஜன 2022