மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 17 ஜன 2022

பிக்பாஸ் வெற்றியாளர் ராஜூ இறுதியில் பேசியது என்ன?

பிக்பாஸ் வெற்றியாளர் ராஜூ இறுதியில் பேசியது என்ன?

பிக்பாஸ் தமிழின் ஐந்தாவது சீசனின் இறுதி நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் ராஜூ வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு அவருக்கு வெற்றிக் கோப்பையுடன் 50 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.

கடந்த சீசனை போலவே இந்த ஐந்தாவது சீசனும் கொரோனா பரவல் தீவிரம் காரணமாக அக்டோபரில் தொடங்கியது,

105 நாட்கள் கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் இடம் பிரியங்கா, மூன்றாவது பாவனி, நான்காவது அமீர் மற்றும் ஐந்தாம் இடம் நிரூப்பிற்கு கிடைத்தது. மேலும் நேற்றைய நிகழ்வில் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நடந்தது. இதுமட்டுமில்லாமல் பிக்பாஸ்ஸின் டிஜிட்டல் வடிவமான 'பிக்பாஸ் அல்டிமேட்' குறித்தான அறிவிப்பையும் நேற்று கமல்ஹாசன் மேடையில் தெரிவித்தார்.

அதாவது, டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் மட்டும் 24 மணி நேர நேரலையாக பிக்பாஸ் ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் ஏற்கனவே முந்தைய சீசன்களில் பங்கு பெற்ற போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.

போட்டியில் வெற்றி பெற்ற ராஜூ பேசும் போது, "வீட்டுக்குள் வந்து ஒவ்வொரு போட்டியாளர்களையும் அழைத்து வரும்போது எங்கே நான் வெளியே போய்விடுவேனோ என பயந்து கொண்டே இருந்தேன். இந்த வெற்றி நான் எதிர்பாராதது. என் மீது அன்பு வைத்து வெற்றி பெற செய்த மக்கள் அனைவருக்கும் நன்றி" என நெகிழ்ச்சியாக கூறினார். பிரியங்காவும் ராஜூவுக்கு வெற்றி கிடைத்ததில் மகிழ்ச்சி என தெரிவித்தார்.

ஆதிரா.

.

சிம்பு தான் வேணும்: ஸ்ரீநிதி

4 நிமிட வாசிப்பு

சிம்பு தான் வேணும்: ஸ்ரீநிதி

இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்?

3 நிமிட வாசிப்பு

இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்?

மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கும் நிலை!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கும் நிலை!

திங்கள் 17 ஜன 2022